Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
கள்ளிக்குடியில் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதத்தை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.

கலவை சாதம்

திருவாரூர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புதிய வகை கலவை சாதங்கள், மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 வயது முதல் 5 வயது வரையிலான முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் காப்புறுதி திட்டம், மாற்று வழி புதுமை கல்வி போதனை மையங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை காய்கறி பிரியாணி, மிளகு தூள் முட்டை வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கொண்டை கடலை புலாவு, தக்காளி மசாலா முட்டையும், புதன்கிழமை தக்காளி சாதம்- மிளகு தூள் முட்டையும், வியாழக்கிழமை சாம்பார் சாதம்- சாதா முட்டையும், வெள்ளிக்கிழமை கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை உள்பட 13 வகையான உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நோக்கம்

பள்ளிச்செல்லும் குழந்தைகள் இடையில் படிப்பை நிறுத்தாமல் இருப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சத்தாண உணவை வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்தை அளித்தல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தினசரி வருகையை அதிகரித்தல் ஆகியை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் உதவி கலெக்டர் பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மீனாட்சிசுந்தரம், உதவி கணக்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் ரவிச்சந்திரன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன், தாசில்தார் நாகராஜன், சத்துணவு திட்ட உதவி கணக்கு அதிகாரி வெங்கட்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: