Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

மெக்கா : சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா நகருக்கு செல்லும் ஹஜ் யாத்திரை இன்று துவங்கியது. ஆண்டுதோறும் 5 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் உலகம் முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் அவர், கடந்த ஆகஸ்டு மாதம், அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றார். அங்கு பணிபுரியும் 32 வயதான பெண் உள்அலங்கார நிபுணர் ஒருவர், ஓய்வறையில் ஆடை மாற்றிய காட்சியை அவர் செல்போனில் வீடியோ படம் எடுத்தார்.

அதுதொடர்பான புகாரின்பேரில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தன் மீது கருணை காட்டுமாறு வேண்டினார்.

இந்நிலையில், அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப துபாய் கோர்ட்டு உத்தரவிட்டது.