Showing posts with label விசாகப்பட்டினம். Show all posts
Showing posts with label விசாகப்பட்டினம். Show all posts

Sunday, October 12, 2014

On Sunday, October 12, 2014 by farook press in ,    
விசாகப்பட்டினம்: ஹுட்ஹுட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது. இதையடுத்து அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. வங்க கடலில் நிலை கொண்ட மிகவும் தீவிரமான ஹுட்ஹுட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் முன்கூட்டியே விசாகப்பட்டினத்தை தாக்கியுள்ளது. துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் தற்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்து வருகின்றன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்பு படையினருக்கு அதை தடையாக உள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் விசாகப்பட்டினத்தை தாக்கி வரும் வேலையில் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் , விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் தொடர்பில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.