Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
னியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் அந்த பெண்ணுக்கு 28 வயது. திருமணமாகி, ஆறே மாதத்தில் கணவரை பிரிந்தவள். விவாகரத்தாகி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன.
‘விரைவாக அவளுக்கு மறுமணம் செய்துவைத்துவிடவேண்டும்’ என்று அவளுடைய பெற்றோர் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை நாலைந்து வரன்கள் அவளை வந்து பார்த்து, பேசி விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். 
அவர்கள் எல்லோருமே கேட்கும் ஒரே கேள்வி, ‘இவ்வளவு அழகாக இருக்கீங்க! தன்மையாக பேசுறீங்க! கை நிறைய சம்பாதிக்கிறீங்க! இவ்வளவு இருந்தும் ஆறு மாதத்திலே உங்க மணவாழ்க்கை முறிந்துவிட்டதே, அதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கிறார்கள்.
அதற்கான உண்மையான காரணத்தை அவள் தன்னை பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாள். ஆனால் ‘இதெல்லாம் ஒரு காரணமா? இதற்காகவா விவாகரத்து செய்திருப்பீர்கள். வேறு ஏதாவது பெரிய காரணம் இருக்கும்!’ என்று முணுமுணுத்தபடி மாப்பிள்ளை வீட்டார் விலகி சென்றுவிடுகிறார்கள்.
அவள் விவாகரத்து செய்ததற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
அவளை பெண் பார்க்க சென்ற நாளிலே, மாப்பிள்ளை பையனின் அம்மாவுக்கு அவளை பிடிக்கவில்லை. அவள் அழகில் தூக்கலாக தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பாள். மாமியாரோ நாணத்தோடு, வெட்கத்தோடு, தன் மகனின் பின்னால் தலைகுனிந்து நிற்கும் மருமகள் வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தவர்.
பெண் பார்த்த அன்றே, ‘உன்னை தூக்கி சாப்பிட்டுவிடுகிறவள் மாதிரி இருக்காளேடா..!’ என்று மகனின் மனதை அசைத்து பார்த்தார். அவனோ, ‘எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு! பேசி, நல்லபடியாக கல்யாணத்தை முடித்து வைத்துவிடுங்கள்’ என்று கறாராக சொல்லிவிட்டான். அதனால் வேறுவழியின்றி கல்யாண ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கின. அப்போது மணமகன், தன் வருங்கால மனைவியான அவளிடம், ‘என் அம்மா உன்னை கர்வம் பிடித்தவள் என்று சொல்கிறார். திருமணத்திற்கு பிறகு நீ என் அம்மாவிடம் கவனமாக இருந்துகொள்ளவேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கிறது. மூன்றாவது நாள், மணப்பெண் வீட்டில் பிரியாணி விருந்து வைத்திருக்கிறார்கள். அதை மாமியார் உள்பட அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.
மறுநாள், ‘உன் வீட்டில் போட்டது பிரியாணியா? அதை இப்ப நினைச்சாலே எனக்கு வாந்தி வருது! பிச்சைக்காரன்கூட அதை தின்னமாட்டான்’ என்று மாமியார் கூறியிருக்கிறார். இதுதான் மோதலின் தொடக்கம்.
அன்றிலிருந்து, மருமகளை மட்டம்தட்ட மாமியார் பிரியாணி மேட்டரை கையில் எடுக்க, மருமகள் பதிலுக்கு காரசாரமாக திட்ட நாளுக்கு நாள் பிரச்சினை வலுத்தது. மகன் அவ்வப்போது வேறுவழியில்லாமல் அம்மா பக்கம் சாய, அவள் கணவரையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்தாள்.
இப்படியே பிரச்சினை பெரிதானதால் அவள் கோபத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, ஒருசில மாதங்கள் தாய் வீட்டில் தங்கிவிட, ‘ஈகோ’ தலைதூக்கி இருவரும் மோதிக்கொண்டார்கள். முடிவில் ‘இனி சேர்ந்து வாழ முடியாது’ என்று விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

இந்த மாதிரியான ‘பிரியாணி மேட்டருக்கெல்லாம்’கூட விவாகரத்து நடக்குதுங்கிறதை உங்க காதிலேயும் போட்டுவைக்கிறோம் அவ்வளவுதானுங்க..!
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர்,செப்.29-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை  யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர்  தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா  ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரான், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன்,  ரவிகுமார்,சிவகுமார், முருகன், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர், பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன்,  ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் பரதிதிபிரியன், வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். 
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூரை சேர்ந்தவன் 8 வயது சிறுவன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த சிறுவனை தனது ஆட்டோவுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த சிறுவனை ஆட்டோவின் பின்புற இருக்கையில் உட்கார வைத்து, செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்தவர்கள், ஆட்டோ டிரைவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அவர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆட்டோ திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதை திண்டுக்கல் ராஜாக்காபட்டியை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ரவிசந்திரனின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி ராமசந்திரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், உணவு வழங்கல் துறை தனிதாசில்தார் (கூ.பொறுப்பு) தயானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் வீ.மணிமுத்து, சந்திரசேகரன், தருமன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராகல்பாவி பிரிவி அருகே ரோட்டோரத்தில் 6 கேன்கள் கிடந்தன. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 160 லிட்டர் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்எண்ணெய் கேன்களை கைப்பற்றி கொண்டு வந்தனர். மேலும் அந்த மண்எண்ணெய் கேன்களை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
நள்ளிரவு வரை பெய்த இந்த பலத்த மழையால் இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், பாளையக்காடு, 2–வது ரெயில்வேகேட் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கி.குமாரசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்களின் கல்வி பயணத்தில் பட்டமளிப்பு விழா என்பது முக்கிய அடையாளமாக அங்கம் வகிக்கிறது. பட்டமளிப்பு என்பது முறைசார் கல்வியின் முடிவாகவும், தொழிற்பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. உயர் கல்விக்கும் பட்டமே முதல் படியாகும். பட்டம் பெறல் எதிர்காலத்தில் உங்கள் செயல்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்பதனையும், நீங்கள் ஏற்க வேண்டிய செயல்கள் எவை என்று உங்களுக்கு உணர்த்துவதாக அமைகிறது. எவ்வகை எதிர்காலம் நமக்கு முன்னாள் இருக்கிறது என்பதை நாம் அறிய இயலாது.
ஆனால் நம் முன் இருக்கும் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் தீர நெஞ்சத்துடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் அனைத்து செயல்களும் வெற்றியாகட்டும். விண் கலங்களை விண்ணில் செலுத்தும் அளவிற்கு ஏற்றமிகு எதிர்காலத்தை தன்கையில் கொண்டுள்ள இந்தியாவில் வாழும் நீங்கள் அதன் ஏற்றத்தை மட்டும் எண்ணாமல் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, ஊட்டக்குறைபாடு, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை நீக்கிட மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் ஆராய வேண்டும். கல்வி என்பது நாகரீகத்தையும், காலசாரத்தையும் கடந்து தனிமனித பண்புகளையும், அறிவினையும் மேம்படுத்தும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
537
விழாவையொட்டி பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 537 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலிங்கம், வ.கிருஷ்ணன், கு.பரந்தமான், ம.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
அண்ணா திமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துக்கும் வகையிலும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்லடம் கல்லம்பாளைத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் ஏ.கே.ராமமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மகளிரணியினர் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, நகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி, நகர அவைத்தலைவர் ராயர்பாளையம் தங்கவேல் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    


திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க சார்பில்,  தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கர்நாடகா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து, மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், நகர  நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன் எம்.சி., கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் நா.சக்திவேல், வளர்மதி கருணாகரன் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் குள்ளி செட்டியார் தெருவில் உள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கருப்பு சட்டை அணிந்து, முதல்வர் ஜெயலலிதா விடுதலை ஆகும்வரை இது தொடரும் என கூறி அமைதியான முறையில் அறப்போராட்டம் இருந்தனர்.