Monday, September 29, 2014
திருப்பூர்,செப்.29-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரா ன், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார்,சிவகுமார், முருகன், உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார் , அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன், ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் பரதிதிபிரியன், வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ச...
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment