Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூரை சேர்ந்தவன் 8 வயது சிறுவன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 3–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள சிறுவர்களுடன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த சிறுவனை தனது ஆட்டோவுக்கு அழைத்து சென்றார். அங்கு, அந்த சிறுவனை ஆட்டோவின் பின்புற இருக்கையில் உட்கார வைத்து, செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
அந்த வழியாக வந்தவர்கள், ஆட்டோ டிரைவரின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். உடனே அவர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அந்த சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆட்டோ திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதை திண்டுக்கல் ராஜாக்காபட்டியை சேர்ந்த ரவி என்ற ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ரவிசந்திரனின் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் ரவிசந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி ராமசந்திரன் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் ரவிச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments: