Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
காங்கயத்தில் நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதாலும், பஸ்கள் இயக்கப்படாததாலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் காங்கயத்தில் அ.தி.மு.க.வினர் தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கயத்தில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்
நேற்று முன்தினம் இரவு பஸ்கள் இயக்கப்படாததால் கிராம மக்கள் அனைவரும் வேலை முடிந்து அவரவர்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் நேற்று 2–வது நாளாக அ.தி.மு.க.வினர் கடைகளை அடைக்கச்சொல்லி கூறியதால், காங்கயத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதே நேரம் போலீசார் கடைகளை திறக்க சொல்லி கேட்டுக்கொண்டதால் காலை 10 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டது. இதை அறிந்து சிலர் மீண்டும் கடைகளை அடைக்க சொல்லி கூறியதால் மாலை வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதேபோல பஸ்கள் காலை 11 மணிக்கு மேல் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. சிறிது நேரமே பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்றன. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையமே வெறிச்சோடி கிடந்தது.
தொடர்ந்து 2 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாததாலும், கடைகள் அடைக்கப்பட்டதாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

0 comments: