Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 40–வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி வரவேற்றார். விழாவில் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் கி.குமாரசாமி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மாணவர்களின் கல்வி பயணத்தில் பட்டமளிப்பு விழா என்பது முக்கிய அடையாளமாக அங்கம் வகிக்கிறது. பட்டமளிப்பு என்பது முறைசார் கல்வியின் முடிவாகவும், தொழிற்பயணத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. உயர் கல்விக்கும் பட்டமே முதல் படியாகும். பட்டம் பெறல் எதிர்காலத்தில் உங்கள் செயல்கள் எதை சார்ந்து இருக்க வேண்டும் என்பதனையும், நீங்கள் ஏற்க வேண்டிய செயல்கள் எவை என்று உங்களுக்கு உணர்த்துவதாக அமைகிறது. எவ்வகை எதிர்காலம் நமக்கு முன்னாள் இருக்கிறது என்பதை நாம் அறிய இயலாது.
ஆனால் நம் முன் இருக்கும் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் தீர நெஞ்சத்துடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் முயற்சியால் அனைத்து செயல்களும் வெற்றியாகட்டும். விண் கலங்களை விண்ணில் செலுத்தும் அளவிற்கு ஏற்றமிகு எதிர்காலத்தை தன்கையில் கொண்டுள்ள இந்தியாவில் வாழும் நீங்கள் அதன் ஏற்றத்தை மட்டும் எண்ணாமல் இந்தியாவில் நிலவும் ஏழ்மை, ஊட்டக்குறைபாடு, எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் ஆகியவற்றை அறிந்து அவற்றை நீக்கிட மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் ஆராய வேண்டும். கல்வி என்பது நாகரீகத்தையும், காலசாரத்தையும் கடந்து தனிமனித பண்புகளையும், அறிவினையும் மேம்படுத்தும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
537
விழாவையொட்டி பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 537 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமலிங்கம், வ.கிருஷ்ணன், கு.பரந்தமான், ம.சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

0 comments: