Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான இயந்திரங்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன.
அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இப்பணிக்காக, தமிழகம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மாவட்ட அளவில் ஒரு இடத்தில், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களுடன், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான 'பிரின்டர்' தருவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 30 வரை, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் என சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.சுருக்க முறை திருத்தத்தின் மூலம் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். 'ஸ்மார்ட்' கார்டு போன்ற அடையாள அட்டை அச்சிடப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25 முதல் வினியோகிக்கப்படும்.

வண்ண அடையாள அட்டை வழங்குவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம். அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில், 25 ரூபாய் செலுத்தி புதிய அட்டை பெறலாம். அறிவிப்பு வரும் வரை, கருப்பு வெள்ளை அடையாள அட்டை மட்டும் வழங்கப்படும். முறையான அறிவிப்பு வந்த பிறகு, சிறப்பு முகாம் நடத்தி, அனைவருக்கும் வண்ண அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் சண்முகம், 50, உடல் நலம் பாதிக்கப்பட்டவர். மனைவி அகிலாண்டேஸ்வரி, 45, தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர்களது மகன் கார்த்திகேயன், 20, கோவையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கார்த்திகேயன், கல்லூரி செல்லும் நேரம்போக, மாலையில் அங்குள்ள மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றினார். குடும்ப சூழ்நிலையை நினைத்து வருந்தி வந்துள்ளார். கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகேயன், வீடு திரும்பவில்லை. காஞ்சி கோவில் அருகே உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. குன்னத்துர் போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில், ஜெ.,வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அ.தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 11.45 மணியளவில், கைகாட்டிப்புதூரை சேர்ந்த ஜெய ராஜ், 65 என்ற தொண்டர், பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு, "அம்மா வாழ்க,' என கோஷமிட்டவாறு, தீக்குச்சியை உரச முயன் றார். அதை பார்த்து அலறியடித்த கட்சி நிர்வாகிகள், ஓடிச்சென்று, தீப்பெட்டியை பறித்தனர். டீக்கடையில் இருந்து தண்ணீர் வாங்கி, அவர் மீது ஊற்றினர். இச்சம்பவத்தால் உண்ணாவிரத பந்தல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இது குறித்த விபரம் வருமாறு: திருப்பூர் மங்கலம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் தங்கராஜா, 45. பைக் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி தங்கமணி, 38. மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கராஜா அடிக்கடி மதுபோதையில் வந்து, மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்து வந்துள்ளார்.கடந்தாண்டு அக்., 4ம் தேதி இரவு, வழக்கம்போல் போதையில் வந்த அவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின், வீட்டிலிருந்த கத்தியால் மனைவியை சரமாரியாகத் தாக்கி, கொலை செய்ய முயன்றார். காயமடைந்த தங்கமணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜாவை கைது செய்தனர். இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜாரானார். இவ்வழக்கில் தங்கராஜாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : ஆயுத பூஜை முடிந்ததும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்' என பல்வேறு வகையான "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என வெளிமாவட்டங்கள்; மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநிலத்தவர்கள், மெஷின் ஆப்ரேட்டர், செக்கிங், அயர்னிங், ஹெல்ப்பர் போன்ற பலவகையான பணிகளில், ஷிப்ட், ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றனர். 
தொழிலாளர்களுக்கு பணி அடிப்படையில், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் பெற்றுக்கொண்டு, குடும்பத்துக்கு தேவையான பண்டிகை கால பொருட்களை வாங்கியும், சொந்த ஊர்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுகின்றனர், தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையை துரத்திய பிரச்னைகளால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கும் போனஸ் சதவீதமும், உயராமல் இருந்தது.தற்போது, பிரச்னைகள் நீங்கி, தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் வசம் பண்டிகை கால ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் குளிர்கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், பின்னலாடை நிறுவனங்களில் ஆடை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆர்டர்களை குறித்த நேரத்துக்குள் அனுப்புவதில், அக்கறை காட்டி வரும் தொழில் துறையினர், பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தயாராகி வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜையை தொடர்ந்து, வரும் 3ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பின்னலாடை துறையினரும், கூடுதல் போனஸ் வழங்க ஆலோசித்து வருகின்றனர்.

"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""ஆயுத பூஜை முதல், தொழிலாளர்களுக்கு படிப்படியாக போனஸ் பட்டுவாடா செய்ய, நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும்,'' என்றார்
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.61.62-ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கையின் மீதான எதிர்பார்ப்பாலும், டாலருக்கான எதிரான தேவை அதிகரித்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.61.53-ஆக இருந்தது.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
விருத்தாசலம்: விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோர்ட் நுழைவாயிலில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து, கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஜெ., தீர்ப்பை கண்டித்து முழு அளவிலான கடையடைப்பு நடந்தது. நீடாமங்கலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
மும்பை : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி கொள்ளும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி சர்வதேச சந்தை நிலவரத்தில் கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது. இதனையடுத்து இந்தவாரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. பெட்ரோல் விலை 50 காசுகள் முதல் ரூ.1 வரையும், டீசல் விலை ரூ.2 வரை குறைக்கப்படலாம் என தெரிகிறது.