Tuesday, October 07, 2014

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில், குமரன் மகளிர் கல்லூரி தலைவர் வசந்தி, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்  ஆகியோர் ராமூர்த்தி, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ்,பூபதி, ரவிச்சந்திரன் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரசுதன், பழனிசாமி, தவசிமுத்து ஆகியோர் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

On Tuesday, October 07, 2014 by Unknown in ,    


On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம்  தலைமையில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை ஏ.எஸ்.தங்கவேலு, முன்னால் கவுன்சிலர் உமாதேவி,கிளை துணை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மண்ணரை பஸ் நிறுத்தம் அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 21வது வார்டு சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அமுதா வேலுமணி தலைமையில், மண்ணரை ஊராட்சி கழக செயலாளர் வேலுமணி, கிளை செயலாளர் பழனிசாமி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலையில் கே.எஸ்.தியேட்டர் எதிரில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்துமீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,ஊராட்சி கழக செயலாளர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் ஊராட்சி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

On Tuesday, October 07, 2014 by farook press in ,    
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் அருகே மங்கலம் சுல்தான்பேட்டையில் சிஐடியு விசைத்தறித் தொழிற்சங்க நி்ர்வாகிகள் கூட்டம் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக்கு கூடுதல் போனஸ் தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். இது தொடர்பாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து போனஸ் வழங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
​------------------
On Tuesday, October 07, 2014 by farook press in ,    
அக்டோபர் 25, 26 ஆகிய நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய மாநாடு மங்கலத்தில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டிற்கு முன்னதாக தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்சியின் 40 கிளை மாநாடுகள் செப்டம்பர் 28, 29 மற்றும் 30ம் தேதி ஆகிய மூன்று நாட்களிள் நடத்தி முடிக்கப்பட்டு கிளைச் செயலாளர்களும், மாநாட்டுப் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாடுகளில், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் முழுமையாக மக்களுக்கு வழங்க வேண்டும். குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், முருகம்பாளையத்தில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
40 கிளைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் விபரம் வருமாறு: பொன்னாபுரம் - அய்யாசாமி, சிட்கோ - செல்வராஜ், சிட்கோ (மாதர்) - காந்திமதி, விஜயாபுரம் - வீரன், நல்லூர் - தங்கமுத்து, ராக்கியாபாளையம் பிரிவு - குணசேகரன், ஜெய்நகர் - சி.சுப்பிரமணியம், வள்ளியம்மை நகர் - துரைசாமி, ஆர்.வி.இ.நகர் - சாமிநாதன், ராக்கியாபாளையம் பிரிவு (மாதர்) - எஸ்.தனபாக்கியம், இந்திராநகர் - செல்வகுமார், செரங்காடு - ஈஸ்வரன், செரங்காடு (மாதர்) - கண்ணம்மாள், செட்டிபாளையம் - கணேசன், வஞ்சிநகர் - தனபால், திருக்குமரன் நகர் - மணி, கல்லாங்காடு - ராஜா, ஜெ.ஜெ.நகர் - ஈஸ்வரன், ஏ.பி.நகர் - ரவிச்சந்திரன், ஏ.பி.நகர் (மாதர்) - சுந்தரி, பாரதிநகர் - ஆர்.குமார், குப்பாண்டம்பாளையம் - குமார், சுண்டமேடு - செல்வராஜ், முருகம்பாளையம் - சின்னசாமி, பெரியார்நகர் - சரஸ்வதி, பகவதிநகர் (மாதர்) - சுசீலா, முருகம்பாளையம் (மாதர்) - ஈ.அங்குலட்சுமி, இடுவம்பாளையம் (கட்டுமானம்) - செல்வராஜ், இடுவம்பாளையம் (மாதர்) - ராணி, ஆண்டிபாளையம் ஏ - ராஜன், ஆண்டிபாளையம் பி - பரிமளம், குளத்துப்புதூர் - ரவி, சுல்தான்பேட்டை - தங்கவேல், மங்கலம் - குப்புசாமி, சீராணம்பாளையம் - கே.ஈஸ்வரன், பாரதிபுரம் - குமாரவேல், குளத்துப்பாளையம் - சாரதி, இடுவாய் - அ.பழனிசாமி, இடுவம்பாளையம் - பத்மநாபன், வீரபாண்டி - சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
------------------------
On Tuesday, October 07, 2014 by farook press in ,    


உடுமலைபேட்டை அரசு பொது நூலகம் கிளை 1ல் எழுத்தாளர் வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி அக்டோபர் 5ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின்பாரதி தலைமை வகித்தார். நிர்வாகி கே.முருகேசன் வரவேற்றார். இதில் சிந்தனைப் போர் முழக்கங்கள் என்ற நூல் பற்றி கவிஞர் பெ.ராஜா உரையாற்றினார். நூலகர் பீர்பாஷா, சண்முகசுந்தரம், பிஎஸ்என்எல் துணைக் கோட்ட அதிகாரி தண்டபாணி ஆகியோர் பாராட்டிப் பேசினர். நிறைவாக நூலாசிரியர் சிவசக்தி ராமசாமி ஏற்புரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.மணி வாழ்த்திப் பேசினார். முடிவில் கோப்பெருந்தேவி நன்றி கூறினார்.