Friday, October 10, 2014
திருப்பூரில் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் போலீஸ் லைன் முதல் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 40). இவர் திருப்பூரில் சொந்தமாக ‘பாலிபேக்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா(37). இவர் கே.வி.ஆர்.நகரில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
போலீஸ் ஏட்டு மணிமாலாவுக்கும், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பார் நடத்தி வரும் திருப்பூர் ஜீவாநகரை சேர்ந்த சக்திவேல்(41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 21 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த மாதம் 11–ந்தேதி காலை மணிமாலா, தனது மொபட், செல்போன்கள் ஆகியவற்றை வீட்டிலேயே வைத்து விட்டு நகை மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு, கள்ளக்காதலன் சக்திவேலுடன் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது. சக்திவேலும் தனது ஸ்கூட்டர், கார், மற்றும் செல்போன்களை வீட்டிலேயே விட்டுவிட்டு மணிமாலாவுடன் சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்து மணிமாலாவின் கணவர் மனோஜ்குமார், கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், சக்திவேலின் மனைவி ஜெயந்தி, தனது கணவரை கண்டு பிடித்து தரும்படி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு மணிமாலா காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி மணிமாலாவை பணியிடை நீக்கம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகலை மணிமாலாவின் கணவர் மனோஜ்குமாரிடம் மாநகர போலீசார் முறைப்படி கொடுத்து கையெழுத்து வாங்கினார்கள்.
இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் ஓடிய மணிமாலா போலீஸ் ஏட்டாக பணியாற்றிய அனுபவத்தால், போலீசார் எந்த வழியில் எல்லாம் காணாமல் போன நபரையோ, குற்றவாளியையோ கண்டு பிடிப்பார்கள் என்று நன்கு தெரிந்து கொண்டிருந்தார். இதனால் தங்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்று, இருவரும் தங்கள் செல்போன்கள் மற்றும் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றதால், போலீசாருக்கு துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக போலீசார் இருவரின் வங்கி கணக்குகளையும் கண்காணித்து வந்தனர். இதன்மூலம் போலீஸ் ஏட்டு மணிமாலா, தனது கள்ளக்காதலனுடன் டெல்லியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூர் போலீசார் டெல்லி சென்று வீட்டை விட்டு ஓடிச்சென்ற இருவரையும் மீட்க முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
திருப்பூர்
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இருந்து கோபால், பைரவன், கார்த்திக், கணேஷமூர்த்தி, தினகரன் ஆகியோர் சபரி மலைக்கு 12-நாள் நடைபயணமாக செல்வதை மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன் ஆகியோர் வழி அனுப்பி வைத்த போது எடுத்த படம் அருகில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுண்சிலர்கள் ப+லுவப்பட்டி பாலு, கீதா ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.
மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இருந்து கோபால், பைரவன், கார்த்திக், கணேஷமூர்த்தி, தினகரன் ஆகியோர் சபரி மலைக்கு 12-நாள் நடைபயணமாக செல்வதை மேயர் விசாலாட்சி, துணைமேயர் குணசேகரன் ஆகியோர் வழி அனுப்பி வைத்த போது எடுத்த படம் அருகில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுண்சிலர்கள் ப+லுவப்பட்டி பாலு, கீதா ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்தரி வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பெண்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராக மாபெரும் தொடர் போராட்டங்களை நடத்துவது என்று சேலத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக போதைப் பழக்கம் மனிதர்களை நடைபிணமாக்கி, வன்முறையையும், சமூக விரோத செயல்களையும் ஊக்குவிக்கிறது. குடும்ப உறவுகளையும், குடும்பப் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கிறது. சாலை விபத்துக்களை ஏற்படுத்துகிறது. ஆனால் தமிழக அரசோ இதை வருமானம் ஈட்டும் ஆதாரமாகப் பார்க்கிறது. இந்த குடிப்பழக்கத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது. அதற்கு மாறாக ஆண்டுக்கு ஆண்டு இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனையை அதிகரித்து வருகிறது.
டாஸ்மாக் கடைகள் பொது இடங்களில் கடைவீதிகள், பள்ளிக்கூடங்கள், ரேசன் கடைகள் அருகே அமைக்கப்படுவதால் பெண்கள், குழந்தைகள் கடும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். எனவே இந்த போதைப் பழக்கத்துக்கு எதிராக, அக்டோபர்14ம் தேதி மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தவும் மாநில மாநாட்டில் அறைகூவல் விடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை சத்திரம் அருகிலும், திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகிலும், திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியிலும், குடிமங்கலம் பூலவாடியிலும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும்.
14ம் தேதிக்கு முன்பாக இக்கடைகளை அரசு நிர்வாகம் மூட வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டபடி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். இதில் மாதர் சங்கத்தினர் மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் அனைத்துத் தரப்பு பெண்களையும் அணிதிரட்டி இப்போராட்டத்தை தீவிரமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் திருப்பூர் தெற்கு ஒன்றியம் அண்ணாநகர் டாஸ்மாக் கடையை எதிர்த்து அக்டோபர் 15ம் தேதியும், செல்லம் நகர் டாஸ்மாக் கடையை எதிர்த்து 16ம் தேதியும், வேலம்பாளையம் நகரத்திற்கு உட்பட்ட சாமுண்டிபுரம் டாஸ்மாக் கடையை எதிர்த்து 17ம் தேதியும் பூட்டுப் போடும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
இப்போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பு மக்கள் ஆதவளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலாளர் ஜி.சாவித்திரி கூறியுள்ளார்.
திருப்பூர்மாவட்டம், உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...









