Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.ரசாயன உரங்கள்ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும் விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.பயிர்கள் செழித்து வளரவும், நோய் தாக்குதலை தடுக்கவும் விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தழை சத்து அதிகரிக்க யூரியா உரமும், மணி சத்து அதிகரிக்க பொட்டாஷ் உரமும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பருவமழை தொடங்கியதாலும் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிகமாக யூரியா உரங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் யூரியா உரம் இருப்பு இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். யூரியா பற்றாக்குறை காரணமாக தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி கூறியதாவது:-வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு இல்லை. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தனியார் கடைகளில் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு உரக்கிடங்கிற்கு 6 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் அந்த உரங்களை பிரித்து அனுப்ப தாமதப்படுத்துகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் உரங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விலை பட்டியல் வைக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் உரக்கடைகளில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றுவது கிடையாது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வராஜூடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “தாளவாடியில் 8 கூட்டுறவு சங்கங்களும், கோபிசெட்டிபாளையத்தில் 18 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 15 டன் வரை யூரியா அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் யூரியாவின் தேவை அதிகமாக உள்ளதால் உடனடியாக விற்பனையாகிவிடுகிறது. ஈரோட்டில் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து பகுதிக்கும் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு பற்றாக்குறை சரிசெய்யப்படும்.“, என்றார்.
On Saturday, October 11, 2014 by Unknown in    
உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி நால்ரோட்டில் அம்மா அவர்களை விடுதலை செய்ய கோரி ஒன்றிய கழக துணைசெயலாளர் மாலதிமதியழகன் தலைமையில் உண்ணாவிரதம் .

 அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டி மாவட்ட எம்.ஜி.ஆர்  மன்ற துணைத்தலைவர் லட்சுமண சாமி  முன்னிலை வகிக்கஒன்றிய செயலாளர் கே ஆருச்சாமி  கே ஜெகந்நாதன் ஒன்றியக்குழுதுணைத் தலைவர்   வாசுதேவன் திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி குமரவேல்,பி குப்புசாமி ,வாளவாடி  வேலுச்சாமி தளி,வாசு கொங்கலகுறிச்சி ,செந்தில் ,கிளைச்செயலாளர்கள்  இ பன்னீர்செல்வம் ,தங்கராஜ் அருள்ஜோதி ராஜேந்திரன் குட்டித்தம்பி    என்கிற பழனிச்சாமி சுப்பிரமணியம்  ரவி ஜோதி சிவசக்தி ஜாபர் குமரேசன் மனோகரன் தும்பலப்பட்டி வாசு சுப்பிரமணி பேங்க் நடராஜ் கண்ணகி செல்வி ரவிசந்திரன் பாக்கியம் சாந்தி ஜானகி காளியம்மாள் ,வெள்ளையம்மாள் தாமரைசெல்வி காந்திமதி பூமாதேவி மற்றும் 1000 கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்
On Saturday, October 11, 2014 by farook press in ,    
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட 7 என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் ஈரோடு செங்குந்தர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் அணி கலந்துகொண்டு விளையாடி முதல் இடத்தை பிடித்தது.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் எஸ்.சிவானந்தன், தாளாளர் ஆர்.மோகன்ராஜ், முதல்வர் ஏ.டி.ரவிச்சந்திரன் மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ–மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
அந்தியூர், பெருந்துறை, அம்மாபேட்டை பகுதி கோவில்களில் அ.தி.மு.க. வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். மசூதியில் தொழுகையும் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை ஆக வேண்டியும், அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டியும் ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 108 பால்குடங்கள் எடுத்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ்.ராஜா தலைமையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து பொங்கல் வைத்து படைத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பூர் சத்தியபாமாவாசு எம்.பி., அந்தியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அப்பாநாயக்கர், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டி.ஆர் முனுசாமிநாயுடு, அந்தியூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம், ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க செயலாளர் பழனிச்சாமி, பெருளாளர் ராஜாமணி, நகலூர் ஊராட்சி தலைவர் வெள்ளியங்கிரி உட்பட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.இதேபோல் செல்லீஸ்வரர் கோவில் மற்றும் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதைதொடர்ந்து அந்தியூர் கெட்டிவிநாயகர் கோவிலில் ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ். ராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 108 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், கவுன்சிலர் சிவக்குமார், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரேவதிசண்முகவேல், கவுன்சிலர் ஜெயபிரகாஷ், செங்கல் உற்பத்தியாளர்கள் செல்வம் துரைசாமி உட்பட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.மேலும் அ.தி.மு.க.வினர் பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர்கள் சேனாபதி, சுப்ரமணியம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுப்ரமணியம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
ஒலகடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூர் மசூதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வி.ஐ.முத்துசாமி தலைமை தாங்கினார். பவானி பி.ஜி.நாராயணன் எம்.எல்.ஏ., அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.எஸ்.அய்யாசாமி, மாவட்ட கவுன்சிலர் எஸ்.டி.சக்திவேல், பேரூராட்சி துணைத்தலைவர் முகமது சர்தார், பேரூர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்பசேகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வடிவேல், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தலைவர் பூபதி, ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் 
On Saturday, October 11, 2014 by farook press in ,    
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிக்கப்படும் பள்ளபாளையம் கிளை வாய்க்கால் மூலம் 554 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பள்ளபாளையம் கிளை வாய்க்கால் முழுமையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் இடது கரையில் கடைமடை பகுதி வரை நீர் நிர்வாகம் செய்யவும் வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து செல்லமுடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட யு–10 பாசனசபை நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்தால் பாதை வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம் என தகவல் தெரிவித்தனர்.
பாசன சபையினரின் முடிவின்படி வாய்க்காலின் அய்யன்வலசு சாலை முதல் கடைமடை பகுதி வரை இடது கரை அருகே நிலத்தில் பயிர்செய்திருந்த மஞ்சள், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்களை அந்தந்த விவசாயிகளே முன்வந்து அகற்றினார்கள். அதன்பின்னர் அந்த இடத்தில் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு மண்பாதை அமைக்கப்பட்டது.
மேலும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இதற்கு செலவான 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்தந்த பகுதி விவசாயிகளே ஏற்று கொண்டனர்.
விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி ஏற்படுத்திய மண்பாதையை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், இணைச்செயலாளர் வெங்கடாசலபதி, பகிர்மான கமிட்டி தலைவர் செங்கோட்டையன், யு–10 பாசன சபை தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் கே.ராம்கி (வயது 25). பி.பி.ஏ. பட்டதாரி. பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக உள்ளார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகள் கே.தங்க சிவசங்கரி (24). பி.காம் பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதற்கிடையே ராம்கி அங்குள்ள விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தார். ஆனாலும் 2 பேரும் செல்போன் மூலம் தங்கள் காதலை தொடர்ந்து வளர்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2 பேரின் காதலும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 பேரின் குடும்பத்தினரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று சிவசங்கரியின் பெற்றோர் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சிவசங்கரியை பள்ளிபாளையத்தில் இருந்து பெங்களூர் மற்றும் கரூரில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிபாளையத்துக்கு சிவசங்கரி வந்தார். பின்னர் ராம்கியும், சிவசங்கரியும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டுக்கு வந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ராம்கியும், சிவசங்கரியும் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒக்கிலிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மகன் குமார் என்ற கோபாலகிருஷ்ணன் (30). பி.ஏ. பட்டதாரி. இவர் பள்ளிபாளையத்தில் நூல் கோண் அட்டை தயாரிக்கும் கம்பெனி வைத்து உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செங்காளிகாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். அவருடைய மகள் சோனியா என்ற நித்யா (26). எம்.பி.ஏ. பட்டதாரி.
திருச்செங்கோட்டில் உள்ள பள்ளியில் நித்யா படிக்கும்போது அவருக்கும், குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமும் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர்.
இவர்களுடைய காதல் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் சோனியாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று வீட்டை விட்டு வெளியேறிய குமாரும், சோனியாவும் திருமணம் செய்து கொண்டு ஈரோடு கருங்கல்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
--–
On Saturday, October 11, 2014 by farook press in ,    
திருப்பூர் பி.என்.ரோடு லட்சுமிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் நிதிநிறுவனத்தில் கள்ளச்சாவியை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று ரூ.81 ஆயிரம் இருந்த பணப்பெட்டியை திருடிச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அந்த நிறுவனத்தின் ஊழியர் மாணிக்கம்(வயது 20), முன்னாள் ஊழியர்கள் யுவராஜ்(26), கார்த்திக்குமார்(20) மற்றும் கார்த்திக்குமாரின் நண்பர் வீரமணி(18) ஆகியோர் பணப்பெட்டியை திருடியது தெரியவந்தது. மேலும், அவினாசி அருகே அந்த பணப்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை பங்கு போட்டுக்கொண்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் 4 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.25 ஆயிரம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் திருப்பூர் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
தாராபுரம், 
விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட கணவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த மனைவி தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து கதறி அழுதார்.
கதவை தட்டினார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் அருகே உள்ள பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 35). கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பா (30). நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ரவி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் இரவு தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவு நேரம் ரவியின் வீட்டின் முன்பு போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது.
அதில் இருந்து சாதாரண உடையில் வந்தவர்கள் ரவி வீட்டின் கதவை தட்டினார்கள். உடனே கதவை திறந்த புஷ்பா, நீங்கள் யார்? என்றார். அப்போது வந்தவர்கள் “தாங்கள் தாராபுரம் போலீசார் என்றும், ரவியை ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்ல வந்து இருப்பதாகவும், அவர் எங்கே என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா, “தனது கணவர், எந்த பிரச்சினைக்கும் போகக்கூடியவர் அல்ல என்றும், எதுவாக இருந்தாலும் காலையில் போலீஸ் நிலையம் வருவார் என்றும் பதில் கூறினார்.
கண்ணீர்
அதற்குள் வீட்டிற்குள் புகுந்த போலீசார் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ரவியை எழுப்பி ஜீப்பில் அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார் என்ற தகவல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா தாராபுரம் போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கதறி அழுது நடந்த விபரத்தை கூறினார். அப்போது போலீசார் “ பெரிச்சிபாளையத்திற்கு தாராபுரம் போலீசார் வரவில்லை என்றும், நாங்கள் அப்படி யாரையாவது விசாரணைக்கு அழைக்க சென்றால் முறைப்படி தகவல் தெரிவிப்போம் என்றும் கூறினார்.
தாராபுரம் போலீசார் தனது கணவரை விசாரணைக்கு அழைத்து செல்லாததால் ரவுடிகள் அழைத்து சென்று இருக்கலாம் என்றும், எனவே தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பிரச்சினை குறித்து தாராபுரம் போலீசார் கூறுகையில் கீரனூர் பெரிச்சிபாளையம் சென்று விசாரணைக்காக யாரையும் அழைத்து செல்லவில்லை என்றும், ரவியை அழைத்து சென்று இருப்பவர்கள் உள்ளுர் போலீசாக இருக்கலாம் என்றும், தெரிவித்தனர்
On Saturday, October 11, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டியும்,பொய்வழக்கில் இருந்து மீண்டு வரவும், மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் போலீஸ் லைன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பால் குடம் மற்றும் பூவோடு எடுத்தும் நிறைவேற்றுவதாக வேண்டியும், பிரார்த்தனை செய்தும் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், சபரீஷ்வரன், மணிகண்டன், ராஜ்குமார், நீதிராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், ருக்குமணி ஆகியோர்கள் உள்பட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.