Saturday, October 11, 2014
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.ரசாயன உரங்கள்ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும் விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.பயிர்கள் செழித்து வளரவும், நோய் தாக்குதலை தடுக்கவும் விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தழை சத்து அதிகரிக்க யூரியா உரமும், மணி சத்து அதிகரிக்க பொட்டாஷ் உரமும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பருவமழை தொடங்கியதாலும் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிகமாக யூரியா உரங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் யூரியா உரம் இருப்பு இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். யூரியா பற்றாக்குறை காரணமாக தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி கூறியதாவது:-வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு இல்லை. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தனியார் கடைகளில் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு உரக்கிடங்கிற்கு 6 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் அந்த உரங்களை பிரித்து அனுப்ப தாமதப்படுத்துகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் உரங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விலை பட்டியல் வைக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் உரக்கடைகளில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றுவது கிடையாது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வராஜூடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “தாளவாடியில் 8 கூட்டுறவு சங்கங்களும், கோபிசெட்டிபாளையத்தில் 18 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 15 டன் வரை யூரியா அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் யூரியாவின் தேவை அதிகமாக உள்ளதால் உடனடியாக விற்பனையாகிவிடுகிறது. ஈரோட்டில் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து பகுதிக்கும் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு பற்றாக்குறை சரிசெய்யப்படும்.“, என்றார்.
யூரியா தட்டுப்பாடு குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வராஜூடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “தாளவாடியில் 8 கூட்டுறவு சங்கங்களும், கோபிசெட்டிபாளையத்தில் 18 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 15 டன் வரை யூரியா அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் யூரியாவின் தேவை அதிகமாக உள்ளதால் உடனடியாக விற்பனையாகிவிடுகிறது. ஈரோட்டில் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து பகுதிக்கும் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு பற்றாக்குறை சரிசெய்யப்படும்.“, என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment