Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2013–14–ம் ஆண்டிற்கு எந்தவித பாகுபாடு மற்றும் உச்சவரம்புகள் இன்றி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணம் வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும், பணிமனையில் முழுமையாக தொழில்நுட்ப பணிகளை ஒப்பந்த முறைக்கு கொண்டு வருவதை தடுப்பதுடன், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள் ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஜேசுமாணிக்கம் முன்னிலை வகித்தார். முன்னதாக எச்.எம்.எஸ். மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மணி முருகன் நன்றி கூறினார்.

0 comments: