Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
கிணத்துக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் மடிக்கணினி திருடிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தனியார் கல்லூரிகள்
கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் வைத்தி ருக்கும் மடிக்கணினிகள் திருட்டு போனது. இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
புகாரை தொடர்ந்து இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்– இன்ஸ்பெக்டர் செல் வநாயகம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் மடிக் கணினிகளை திருடிய திருச்சி மணப்பாறையை சேர்ந்த கணேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். இவர் பகல் நேரங்களில் ஜோசியம் பார்ப் பது போன்று சென்று மாண வர்கள் தங்கி உள்ள வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அவர் கள் இல்லாத நேரத்தில் சென்று மடிக்கணினி களை திருடி உள்ளார். இவர் தற் போது கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள் ளார்.
குண்டர் சட்டத்தில் கைது
கணேஷ் மீது ஏற்கனவே கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், மதுக்கரை போலீஸ் நிலை யத்தில் 5 வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்கு களும் மடிக்கணினி திருடிய வழக்குகள் ஆகும்.
தொடர்ந்து மடிக்கணினி களை திருடி வந்த கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், இது குறித்து கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மடிக்கணினிகளை திருடிய கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கிணத்துக்கடவு போலீ சார் கோவை மத்திய சிறைச் சாலை அதிகாரிகளிடம் வழங் கினார்கள்.

0 comments: