Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், அழகு கண்ணன், ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு சூலூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் பிரதான நுழைவு வாசலை பூட்டினார்கள். பின்னர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். இதில் அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த கணக்கைவிட ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அதிகமாக இருந்தது. அதன்பேரில் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அங்கு வேலை செய்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: