Tuesday, February 23, 2016

On Tuesday, February 23, 2016 by Unknown in , ,    
கோவில் பாதுகாப்பு பணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

மாத சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். காலியாக உள்ள இடங்களில் சேர விருப்பம் உள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்றுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2321678 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை, மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார். 
On Tuesday, February 23, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடியில் லோடு ஆட்டோ மோதி பைக்கில் சென்ற விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி, அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (48). விவசாயி. இவர் நேற்று மாலை அத்திமரப்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நகர் நோக்கிச் சென்ற லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த லாரன்ஸ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரான முத்தையாபுரம் சூசையா நகரைச் சேர்ந்த அந்தோணி மகன் அஜித் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in    
திருச்சி                                              
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தமிழக விவசாயிகள் தங்களை தயார் படுத்திக்கொண்டு, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி  அதிக மகசூல் பெற கற்று கொள்ள வேண்டும் என க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் ஆராய்ச்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் பொதுபணித்துறை  நார்வே அரசின் நிதி உதவியுடன் பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பூமி வெப்பமடைவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையில் 50% குறிப்பிட்ட சில தினங்களிலேயே ஒட்டுமொத்தமாக பெய்து விடுகிறது. இதனால் வெள்ளபெருக்கு ஏற்படுகிறது. அதன் பிறகு பெரும்பாலான நாட்கள் ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு காணபடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 10 சென்டிமீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து கொண்டே போகிறது. நமக்கு கிடைக்கும் மொத்த தண்ணீரில் 70% விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் உபயோகிக்கும் திறனை 16% விவசாயிகள் மட்டுமே அறிந்துள்ளனர். வறட்சி காலங்களில் விவசாயிகள் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இவர்களது வாட்டத்தை போக்கும் விதமாக க்ளைமா-அடாப்ட் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இதில் குறைந்த தண்ணீரை செலவு செய்து அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையிலான  திருந்திய நெல் சாகுபடி முறைக்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது, நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது, மண்ணை உயிர்பிப்பது, சிறு குறு தானியங்கள் உற்பத்தி செய்வது, சொட்டுநீர்பாசன முறை பின்பற்றுவது, விவசாயத்தில் நவீன கருவிகள் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டும். 62 வகையான நெற்பயிர்களை நடவு செய்து ,அதிக வெப்பத்தில் குறைந்த தண்ணீரை கொண்டு அதிக மகசூல் பெறுவதற்கான ஆய்வுகள் ஈரோடு மாவட்டத்தில் பசுமையான காளிங்கராயன்  பகுதியிலும், திருச்சியில் வரட்சியான பொன்னனை அணைக்கட்டு பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 23, 2016 by Tamilnewstv   

On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in    

On Tuesday, February 23, 2016 by Tamilnewstv in