Saturday, April 16, 2016

On Saturday, April 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி திமுக மற்றும் கூட்டணி கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் நேரு பேச்சு
திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தேர்தல் ஆலோசனைக்குறித்த செயல்வீரர் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது அப்பொழுது முன்னாள் அமைச்சர் தற்பொழுது மேற்கு தொகுதி வேட்பாளருமான நேரு பேசுகையில் தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கை மற்றும் நம்முடைய திட்டங்களை வீடு வீடாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் தீடீர் என்று தேர்தல் கமிஷன்  நம் மீது வழக்கு போடுவதில் தேர்தல் கமிஷனுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்று கூறினார் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிகழ்ச்சியில் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ); திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
On Saturday, April 16, 2016 by Tamilnewstv in    
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புளிக்காத கள்ளை சந்தைப்படுத்த முயன்ற  என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உட்பட 25 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். 

உலக அளவில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு 29 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம். எனவே தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை  உடனடியாக நீக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். . கேரள அரசு  இந்திய தென்னை வாரியம் மற்றும்  மத்திய அரசின் உதவியுடன் புளிக்காத கள்ளை  "நீராஎனும் பெயரில் விற்பனை செய்து வருகிறது. இதை கேரளாவில் இருந்து வாங்கி வந்து திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் கடைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விற்பனை செய்ய முயன்றார்கள்இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

Friday, April 15, 2016

On Friday, April 15, 2016 by Tamilnewstv in    
திருச்சி 15.4.16                                      சபரிநாதன் 9443086297
திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திருச்சியில் உள்ள முக்கியமான தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர்
திமுக தலைமை அறிவித்த திருச்சி திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணிகட்சி காங்கிரஸ் வேட்பாளர்கள் திருச்சியில் உள்ள தலைவர்கள் அண்ணா சிலை முதல் அம்பேத்கார் சிலைவரை மாலை அணிவித்தனர்

இந்நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் திருவரங்கம் பழனியாண்டி திருச்சி மேற்கு நேரு (திருச்சி கிழக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜெரோம்ஆரோக்கியராஜ); திமுக வேட்பாளர் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லால்குடி சௌந்தரபாண்டியன் மண்ணச்சநல்லூர் கணேசன் குளித்தலை ராமர் (மணப்பாறை முஸ்லீம் லீக்) முசிறி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

Thursday, April 14, 2016

On Thursday, April 14, 2016 by Tamilnewstv in    
திருச்சி 14.4.16                சபரிநாதன் 9443086297
திருச்சியி;ல் டாக்டர்.அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண்டான அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கார் சிலைக்கு திராவிடகழகம் திமுக அதிமுக மக்கள்நலகூட்டணிமற்றும் பல்வேறு கட்சியின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது
On Thursday, April 14, 2016 by Tamilnewstv in    
 திருச்சி 14.4.16               சபரிநாதன் 9443086297
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது
உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது அப்பொழுது உற்சவர் வெக்காளியம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் திரண்டு வந்;திருந்தனர் பக்தர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
On Thursday, April 14, 2016 by Tamilnewstv in    
 திருச்சி 14.4.16            சபரிநாதன் 9443086297

உலக சித்தர்கள் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சாதனை சான்றிதள் வழங்;குதல ருத்; சாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலி;ன் வரலாற்றை 13 நிமிடத்தில் விளக்கி குறுந்தகடாக வெளியிட்டு சாதனை புரிந்துள்ள 9ஆம் வகுப்பு படித்து வரும் மீனாட்சி என்னும் மாணவிக்கு யோகரத்ணா கிருஷ்ணகுமார் தலைமையில் சாதனை சான்றிதழ் வழங்குதல் மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி இயக்குநர் சகாயராஜா மற்றும் விஜயகுமார் சம்பத் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Wednesday, April 13, 2016

On Wednesday, April 13, 2016 by Tamilnewstv in    

Tuesday, April 12, 2016

On Tuesday, April 12, 2016 by Tamilnewstv in