Thursday, April 30, 2020
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு லாரியில் பழங்கள் கொண்டுவந்து கொடுத்த மனிதநேய செயல்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே நாமக்கல் நகரிலிருந்து வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு தனது டிரைலர் லாரி மூலம் பழங்களை கொண்டுவந்து கொடுத்த லாரி டிரைவரின் மனிதநேய செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
நாமக்கல் நகரை சேர்ந்தவர் லாரிடிரைவர் கண்ணன். இவரதுமகன் பிரதீப் இருவரும் டிரைலர் லாரி சொந்தமாக வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதிகளில் வசிக்கும் குரங்குகள் உணவுக்கு தவிப்பதை கண்டடிரைவர் கண்ணன் நாமக்கல் நகரில் வாழைபழம், தர்பூசணி, ஆகியவற்றை வாங்கி தனது டிரைலர் லாரி மூலம் கொண்டு வந்து சக்கம்பட்டி, கரட்டாம்பட்டி ஆகிய வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு வழங்கினார். லாரிடிரைவர் போக்குவரத்து தடைபட்டதால் நாமக்கல்லில் நிறுத்தியிருந்த தனது லாரி மூலம் குரங்குகளுக்கு பழங்களை கொண்டுவந்து அளித்தசம்பவம் சமூகஆர்வலர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் 26 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் 23 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமிருந்த 3 பேரும் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநகரமாக திருச்சி மாறியுள்ளது.
இம்மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 14 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
On Thursday, April 30, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சி
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
கொரோன தொற்று ஹிந்து முஸ்லிம் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி*
அவர் கூறுகையில் தொற்று நோயிலிருந்து குணமடைந்து எல்லோரும் வீடு திரும்பினர் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. தன் (முஸ்லீம்)சமூகத்தின் மீது பழி சொல் மன அழுத்தம் இவ்வளவு அடைந்தாலும் கூட திருச்சியில் 150 பேர் பிளாஸ்மா தெரபிக்கு ரத்தம் கொடுத்துள்ளனர் மேலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தங்களின் ரத்தத்தை கொடுத்துள்ளனர்.
தமிழக அரசும் பிளாஸ்மா தரப்பிக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருக்கிறது. எனக்கு பயமாக இருந்தது மனித நேயமே போய்விட்டதோ என்று தற்போது மனித நேயம் சாகவில்லை என்பதனை இவர்கள் (முஸ்லீம்)நிரூபித்துள்ளனர் முஸ்லீம்கள் இந்துக்கள் என்று சகோதரர்களாக வாழ்ந்து வந்த நாம்இன்றைக்கு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்படுத்தி இடைவெளி ஏதோ ஒரு சார்பு மக்கள் மட்டும் இஸ்லாமியர்கள் மீது வன்மம் காட்டுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று மன வேதனையுடன் தெரிவித்தார்.
Tuesday, April 28, 2020
On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர்.
ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதிமணியின் மகன் சந்திரமோகன் (38) இவர் பிரபல ரவுடி பல கொலை வழக்குகளில், கொலை முயற்சி வழக்குகளும் இவர் மீது உள்ளது.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர் இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும்
அண்ணன் தம்பிகள்
சுரேஷ் (35) சரவணன் (30) இவர்கள் இருவரும் மற்றொருவர் செல்வகுமார் (25) 3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழி மறித்து
ரவுடி சந்திரமோகன்
தலையை துண்டித்தனர்.
பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பறறி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள்.இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி இப்படி கடிதம் கொடுக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசு உத்தரவின் பெயரில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறதா? உயரதிகாரிகள் ஏதேனும் சிறப்பு சலுகையின் பெயரில் கடிதம் கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாக உள்ளது?
சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று வந்துள்ளதால் பரபரப்பு,
மாவட்ட ஆட்சியாளர் மட்டுமே வழங்க வேண்டிய Epass யை மணப்பாறை காவல் ஆய்வாளர் எவ்வாறு வழங்கினார் பொதுமக்கள் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் இபாஸ் பெற்று அதன் பின்னரே செல்ல முடியும். அப்படி இபாஸ் பெற வேண்டும் என்றாலும் கூட இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே பெற்றுச் செல்ல முடியும். அந்த இபாசிலும் கூட யார் செல்கின்றனர் அவர்களின் செல்போன் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்.
இது அரசின் கவனத்திற்குள் எப்போதும் இருக்கும். இந்த இபாசை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே பெற முடியும் என்றும் கூட அரசு அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை பலரும் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் ஒரு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை, தேனி என பல்வேறு சென்று வருகின்றனர். அப்படி கொடுக்கப்படும் கடிதத்தில் எத்தனை நபர்கள் செல்கின்றனர்? அவர்களின் பெயர் என்ன? அவர்கள் செல்போன் எண் என்ன? என்ற எந்த தகவலும் இல்லை? என்பதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலை கூட காவல் நிலையத்தில் வாங்கி வைப்பதில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே தான் இந்த இபாஸ் முறை நடைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிட முடியும் என்ற நிலையில் தற்போது மணப்பாறை காவல் நிலையத்தில் காவல்துறையினரே இதுபோன்ற கடிதம் வழங்கும் முறையை நடைமுறைபடுத்தி இருப்பது கொரோனா அச்சத்திற்கான வழிவகையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி யார் செல்கின்றனர் என்ற விபரமும் காவல் நிலையத்தில் இல்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
ஆகவே இப்படியாக மக்கள் கோரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் வழக்கம் போல் சென்று வரும் நிலையில் மணப்பாறை பகுதிக்கும் கொரோனா தொற்று உருவாகிவிடுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் மக்கள் உறைந்து கிடக்கின்றனர்.
ஆகவே இதுபோன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் அவரின் பெயரால் காவல்துறையினர் அனுமதி கடிதம் கொடுக்கலாமா? 144 தடை உத்தரவு உள்ள நிலையில் எப்படி அந்த கடிதம் கொடுக்க முடியும்? அந்த கடிதம் கொடுப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது? கடிதத்தை பார்த்து மற்ற மாவட்டங்களில் எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதையெல்லாம் விரிவாக விசாரணை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க முயலும் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதலால் அனைவருக்கும் பல இடையூறுகள் ஏற்பட்டு உள்ளது.
வேலைக்கு செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வாழை வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டு இருந்தோம்.
வெற்றிலை தற்போது காய்ந்து விட்டது சூறாவளியில் வாழை உடைந்து விழுந்து விட்டது அதேபோல் கரும்பு காய்ந்து விட்டது மாம்பழம் பலாப்பழம் தென்னை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரும்பு ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது நெல் பெற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது இதில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் அடுத்து ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும்.
அதில் திருச்சியிலிருந்து சென்னைக்கு 326 கிலோ மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியுடன் 25 அடிக்கு ஒரு விவசாயி அமர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் இதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும்.
கொரோனா தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தால் வறட்சியின் காரணமாக துன்பத்தில் 100 பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
வேலைக்கு செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல் விவசாயிகள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வாழை வெற்றிலை ஆகியவற்றை பயிரிட்டு இருந்தோம்.
கரும்பு ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது நெல் பெற்ற பணமும் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கும் வழங்குவது போல் விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது இதில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் தராவிட்டால் அடுத்து ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும்.
அதில் திருச்சியிலிருந்து சென்னைக்கு 326 கிலோ மீட்டர் தூரம் வரை சமூக இடைவெளியுடன் 25 அடிக்கு ஒரு விவசாயி அமர்ந்து மாஸ்க் அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் இதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும்.
கொரோனா தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தால் வறட்சியின் காரணமாக துன்பத்தில் 100 பேர் இறக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Monday, April 27, 2020
On Monday, April 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
வியாபாரிகள் எதிர்பை தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை ஜீ-கார்னருக்கு மாற்றப்பட்டது - சில்லரை வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது
கொரனா பாதிப்பை தொடர்ந்து
திருச்சி காந்தி மார்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாததால் உடனடியாக
மார்கெட்டை திருச்சி - சென்னை பை பாஸ் நெடுச்சாலையில் உள்ள பழைய பண்ணையில் தற்காலிக சந்தை இயங்கி வந்தது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், கொரோன விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
ஆனால் இதையும் மீறி மக்கள் தொடர்ந்து கூட்டமாக வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சந்தையை பால்பண்னையிலிருந்து சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனே திருச்சியில் காந்தி மார்கெட் வியாபாரிகள் சங்கங்களில்
27சங்கங்கள் இணைத்து இதை ஏற்க முடியாது என கூறி
காந்தி மார்கெட்டில் மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்
வரை காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஆனால் வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில்
அமைச்சர் வெல்மண்டி நடராஜன் வேண்டுகோளுக்கு இணங்க ஊரடங்கு முடியும் வரை அதாவது 3- ஆம் தேதி வரை பால்பண்ணையில் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அரியமங்கலம் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் இயங்கி வந்த பால்பண்ணை மொத்த காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பினை தொடர்ந்து இன்று இரவு முதல் பொன்மலை ஜீ கார்னர் மைதானத்துக்கு மாற்றப்படும் எனவும், தினந்தோறும் இரவு 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செயல்படும். சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் இங்கு வரக்கூடாது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இதனையடுத்து இன்று இரவு மார்கெட் உடனடியாக பொன்மலை ஜீ. கார்னர் மைதானத்தில் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில்லரை வியாபாரத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும் என கூறி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
கர்நாடக . கேரளா, அந்திரா உள்ளிட்ட
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் ஊட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காய்கறிகளை லாரியை விட்டு இறக்காமல் நிறுத்தி வைத்தனர். சிறு விவசாயிகள் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்த காய்கறிகளையும் இறக்காமல் நிறுத்தி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி மற்றும் கோட்டை தாசில்தார் மோகன் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது .இதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், தமிழ்நாடுவணிகர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் மொத்த வியாபாரி கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கடைகளை கணக்கெடுத்து உரிய முறையில்
நாளை முறைப்படி டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் சில்லறை வியாபாரமும் நடைபெறும் என முடிவு காணப்பட்டது.
அதன்
பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் சில்லரை வியாபாரிகளும் இன்று கடை போடலாம் என கூறியதையடுத்து லாரியிலிருந்து காய்கறிகள் இறக்கப்பட்டு சில்லரை வியாபாரிகளுக்கு மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்ய துவங்கினர். இதனை தொடர்ந்து சில்லரை வியாபாரிகளும் வியாபாரத்தை துவங்கினர்.
இங்கு என்ன காரணத்திற்க்காக மாற்றப்பட்டதே அந்த சமூக இடைவேளை என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
On Monday, April 27, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
துறையூர் அருகே கோட்டாத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் துப்புரவு பணியாளர்கள் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சித் தலைவர் திருமூர்த்தி அக்கிராமத்தில் உள்ள துப்புறவு பணியாளர்கள் மற்றும் நலிவடைந்தவர்கள் 20 பேருக்கு ரூபாய் 800 மதிப்புள்ள மளிகை பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார். 5 கிலோ அரிசி பருப்பு காய்கறிகள் ஒரு கிலோ கோழி இறைச்சி மசாலா பொடிகள் மிளகு சீரகம் முககவசம் சானிடைசர் சோப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரூபாய் 800 மதிப்புள்ள மளிகை பொருட்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் நலிவடைந்தவர்கள் 20 பேருக்கு கோட்டாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமூர்த்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மதிவதினிகுணசேகரன் துணைத் தலைவர் உஷாரவிக்குமார் ஊராட்சி செயலர் கற்பகச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
On Monday, April 27, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
முசிறி அருகே குடும்பதகராறில் கணவன், தாய் கண் முன்பு கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவன், மாமியார் கைது
மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்த பாச தாய்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சஞ்சீவிராஜ். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரக்ஷனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
ரக்ஷனா கர்ப்பிணியாக இருந்தநிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடைபெறுவது வழக்கம். ரக்ஷனா கணவரிடம் கோபித்துகொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
சஞ்சீவிராஜ் பைக்கில் மனைவியை அழைத்துசென்றுள்ளார். ரக்ஷனா வீட்டருகே மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் இருந்து கீழே இறங்கிய ரக்ஷனா அப்பகுதியில் இருந்த ஆழமான கிணற்றில் குதித்துள்ளார்.
நீச்சல் தெரியாத நிலையில் ரக்ஷனா உயிருக்கு போராடி உள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த ரக்ஷனாவின் தாய் தனலட்சுமி ஓடிவந்து மகளை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். ஆனாலும் ரக்சனா தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். அருகிலிருந்தவர்கள்
கிணற்றில் குதித்து தனலட்சுமியை காப்பாற்றினர். முசிறி, துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரக்சனாவின் உயிரற்ற சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்த முசிறி போலீசார் இளம்பெண் இறப்புக்கு காரணமான சஞ்சீவிராஜ், இவரது தாய் பாப்பாத்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மகளை காப்பாற்ற ஆழமான கிணற்றில் குதித்து போராடிய தாயின் பாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிஅடைய செய்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...








