Thursday, May 07, 2020

On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் 36 பேருக்கு*
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை

இன்று 5 பேர் பாதிப்பு

மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல்

திருச்சி மாவட்டத்தில் 57  பேர் சிகிச்சை பெற்று வந்தனர் .ஏற்கனவே 51 பேர் பூரண குணத்துடன் இல்லம் அனுப்பிவைக்கப்பட்டனர்

ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் 4,5 தேதிகளில் இங்கு வந்ததில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது

மீதமுள்ள 256 பேரை சோதனை செய்ததில் 253 பேருக்கு கொரோனா தொற்று இல்லை.அப்போது 3  பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது

இதேபோல் திருச்சி *மாவட்டத்தினை சேர்ந்த 1 நபருக்கு சேலத்திலும் மற்றொரு நபருக்கு கரூரிலும்  கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது

ஆக மொத்தம் இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உள்ளது
திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 11 நபர்கள்,  அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்த 9  நபர்கள், பெரம்பலூர் மாவட்டத்தினை சேர்ந்த 13 நபர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தினை சேர்ந்த 2 நபர்கள்,கரூர் மாவட்டத்தினை சேர்ந்த 1 நபர் என மொத்தம் 36  நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எல்லோரும் நலமுடன் உள்ளனர்
ஆகவே எல்லோரும் தனித்திரு, விலகியிரு,வீட்டிலிரு என்பதனை கடைப்பிடிக்க வேண்டும்.
On Thursday, May 07, 2020 by Tamilnewstv in    
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் முடிவை ரத்து செய்க!

தமிழக அரசுக்கு கோரிக்கை
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டது.
இந்த வேண்டுகோளை  நிராகரித்து விட்டு,  (07.05.2020) டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டிக்கிறது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி பரிபூரண மதுவிலக்கை நிறைவேற்றுவது என்பது ‘அம்மா அரசின் கொள்கை’ என்று அறிவித்து வரும் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அரசு மதுபான வியாபாரத்தை மட்டுமே அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் கருதுவது வெட்கக் கேடானது.
“குஷ்டரோகி கையில் உள்ள வெண்ணைய் போல் மதுவின் மூலம் கிடைக்கும் வருமானம்“ இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றார் பேரறிஞர் அண்ணா.
மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்காக தனது தோட்டத்தில் தென்னை மரங்களை அனைத்தையும் வெட்டி அகற்றினார் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈ.வெ.ரா.
அஇஅதிமுக அரசு கடந்த 17 ஆண்டுகளாக மதுபான வியாபாரத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ‘மதுக்குடியர்களை’ உருவாக்கி மனித வளத்தை உருக்குலைத்து வருகிறது .
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரானா நோய் பெருந்தொற்று பரவி மக்கள் உயிர்களை பறித்து வரும் நிலையில், அந்த ஆட்கொல்லி நோய் ஒரே நாளில் 527 பேர்களை தொற்றிப் பரவி விட்டது என்று அறிவிக்கும் அரசு, டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அறிவித்திருப்பது ஆக்கபூர்வ சிந்திக்கும் திறனை இழந்து விட்டதன் அடையாளமாகும்
கோவிட் 19 நோய் பெருந்தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தேவையான நிதியை கேட்டுப் பெற இயலாத அரசு, அழுத்தம் கொடுத்து கேட்டால் மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாவோம் என அஞ்சி நடுங்கி அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி ரூபாய் 250 கோடி சுமையை , 40 நாட்களாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்கள் தலையில் ஏற்றியுள்ளது.
மக்கள் நலன் பேணுவதில் அக்கறை காட்டாத அரசியல்,  சுயநலக் கும்பல்  ஆதாயம் தேடி வருவதை  முதலமைச்சர் பொறுப்பில் உள்ள பொதுப் பணித்துறையில் வெளியாகும் ஊழல் புகார்கள் வெளிப்படுத்துகின்றன.
கொரானா தடுப்பு ஊரடங்கு காலத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5/=ஆயிரம் கோவிட் நிவாரண நிதி வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரிக்கையைக் கூட பரிசீலிக்காத தமிழ்நாடு அரசு, ஏழை மக்கள் வீடுகளில் உள்ள குடும்பப் பெண்கள் தாலி உட்பட தட்டுமுட்டுச் சாமான்களை பறித்துக் கொள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க முடிவு செய்துள்ளது.
கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தீவிரமாகி வரும் சூழலில் மதுக்கடைகளை திறக்கும் தமிழ்நாடு அரசின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக மதுக்கடைகள் திறக்கும் உத்தரவை ரத்து செய்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
KC.பாண்டியன், R.நடராஜன், பா.லெனின் ஆகியோர் தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போன்று DYFI மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் இல்லத்தில் குடும்பத்தினரோடு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தினார்கள்

Wednesday, May 06, 2020

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
*திருச்சிக்கு எச்சரிக்கை மணி.. உஷார்.* 

திருச்சி மாநகரில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிக்கக்கூடிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதுதவிர கோயம்பேடு Source மூலமாக துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 2 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 
ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் ஒரு சிலருக்கு பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவத்துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

 *_திருச்சி வாழ் மக்களே..!!_* 

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டதே எனக்கருதி, கட்டுக்கடங்காமல் திரிந்தால், 
கொரோனா வார்டிலுள்ள கட்டில்களும் - நம்மை வரவேற்க காத்திருக்கின்றன.

சூழ்நிலையை உணர்ந்து,
நாமும் பாதுகாப்பாக இருப்போம்..
நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பாதுகாத்திருப்போம்.

அரசு விதிமுறைகளை பின்பற்றுவோம் சமூக விலகலை கடைபிடிப்போம்
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரம் இல்லாமல், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வளர்மதி. இவர் தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதற்கு முன்பே அமைச்சர் வளர்மதி மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவு முடிந்ததும் இந்த திருமணம் கடந்த 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறவிருந்த, நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரமின்றி சமூக இடைவெளியுடன் திருச்சி குணசீலம் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டும் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் வளர்மதி - சீதாராமன் ஆகியோரது இளையமகன் ஹரிராம் - திருச்சி மருதாண்டா குறிச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் - சந்திரா ஆகியோரது மகள் சூரியபிரபா ஆகியோரது திருமணம் பூட்டப்பட்டிருந்த கோயில் வாசல் முன்பு, இனிதே நடந்து முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
தமிழக அரசு நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 


அதன் படி 
நமது திருச்சி மாவட்டத்தில் நகர்புறங்களில் உள்ள 71 மதுபான கடைகளும் கிராமப்புறங்களில் உள்ள 112 
மதுபான கடைகளும் இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 20 
கடைகள் திறக்கப்படவில்லை. 

 மதுபான கடைகள் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 
திறக்கப்பட்டிருக்கும். மது வாங்க வருபவர்களுக்கு காலை 8.00 மணி முதல் சமுக இடைவெளியை 
பின்பற்றி டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வரிசைபடி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். மதுபான 
கடையில் வரிசையில் நின்று வாங்குவதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது 6 அடி இடைவெளி 
விட்டு வரிசையில் நிற்பதற்காக அடையாளம் இடப்பட்டுள்ளது. 

 மதுபானக் கடை ஊழியர்களுக்கு கிருமிநாசினி கையுறை முககவசம் ஆகியவை 
வழங்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் கிருமிநாசினி 
கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படுவர். 

சமுக 
இடைவெளியை பின்பற்றி நாளை முதல் மதுபானக் கடைகள் செயல்படும். மொத்தமாக எந்தவொரு 
நபருக்கும் மதுபான வகைகள் வழங்கப்படாது. தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு 
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு  தெரிவித்துள்ளார்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் 

தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.



தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக 144 ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்து மிகவும் சிரமம் படுவதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி,பருப்பு என்னை, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள,மல்லித்தூள் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் காய்கறிகள் ஆகியவை சுமார் ரூபாய் 1000 மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.


இதில் திருச்சி மாநகரம், 
லால்குடி ஒன்றியம், 
புள்ளம்பாடி ஒன்றியம், 
துறையூர் ஒன்றியம், உப்பிலியாபுரம் ஒன்றியம், தாப்பேட்டை ஒன்றியம், முசிறி ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.



நிகழ்ச்சியின் நிறைவாக மணப்பாறை உள்ள திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையிலும் மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் தங்கவேல் அவர்கள் மாவட்ட ஆலோசனைக் குழு தலைவர் சுப்புரத்தினம் மாவட்ட ஆலோசனைக் குழு மகளிரணி செயலாளர் தனலட்சுமி முன்னிலையில் 50 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி மதிமுக 27 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது

திருச்சியில் இன்று மதிமுகவின் 27 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியான கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மதிமுகவின் கொடிகள் உறையூர் மேட்டு தெரு குமரன் நகர் ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

 திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ராஜன் இலமுருகு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தலைமை வகித்தார். ஜெயசீலன் பகுதி கழக செயலாளர் வரவேற்புரையாற்றினார் சக்தி மகேந்திரன் மோகன் முரளி சுந்தர் ஜாஹிர் இஸ்மாயில் ஆனந்தன் எட்வர்டு தவமணி புண்ணியமூர்த்தி அசோக்குமார் ராமசுப்பு, மாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் கொடியேற்றி அன்னதானம் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரொஹையா பெல் ராஜமாணிக்கம் துரையரசன் எல்லகுடி அன்புராஜ் அடைக்கலம் (தலைவரின் நேர்முக உதவியாளர்) ஜார்ஜ் ராஜா மலர் செழியன் விவேக் அன்பு சேகர் பாரதி அர்ஜுன் ரெங்கராஜ் நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் உறையூர் பகுதி கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஸ்போர்ட் வரதன் 60 வது வட்ட கழக செயலாளர் நன்றி உரை ஆற்றினார்.

  பின்னர் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா கூறுகையில்



நாங்கள் 27 ஆண்டுகளாக டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தோம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் மதிமுக சார்பில் 3000 கிலோ மீட்டர் வரை நடந்து கிராமங்களுக்கு எல்லாம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். 

நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் அதன் விளைவுதான் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப்பட்டுள்ளது தற்போது சில நாட்களாக எல்லோரும் நன்றாக தான் இருந்தார்கள் நாளைக்கு டாஸ்மார்க் கடைகளை திறந்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் ஊரடங்கு உத்தரவை மூடப்பட்ட மதுக் கடைகளை தொடர்ச்சியாக மூடி மதுவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தலைவரின் குறிக்கோள்
மதுபான கடைகளை திறந்தால் கொரோனாதொற்று அதிகமாக பரவ கூடும் என்பதுதான் உண்மை மது அருந்துவதனால் அவர்களின் மது அருந்துபவர்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எளிதாக கொரோனா தொற்று பரவ கூடும் இதனால் மருத்துவர்களுக்கு காவல்துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்
இப்போது இருக்கும் வேலையை விட பத்து மடங்கு அதிகமாகும்
எங்கள் மதிமுகவின் சார்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள்

தற்போது உள்ள மதுபானங்கள்  விரைவில் காலாவதி ஆகப்போகிறது அதனால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்,

இது பெரும் பிரச்சினையை தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சமூக பரவல்கள் அதிகமாக கூடும் என்று மருத்துவர் ரொஹையா தெரிவித்தார்.


பேட்டி.... மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

மாவட்ட குற்றவியல் சங்கம் சார்பில் நலிந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து நீதிமன்றங்கள் மூடப்பட்ட தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் வழக்கறிஞர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட குற்றவியல் சங்கத்தின் சார்பில் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் அரிசி, காய்கறி ஆகியவற்றை வழங்கினார். மேலும் கொரோனா தொந்த நோய் கட்டுப்படுத்தும் வகையில்  கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  கிருபாகரன்மதுரம், மற்றும் வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், கிஷேர் குமார்,  கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர். 
சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இன்று முதல் கட்டமாக 50 வழக்கறிஞர்களுக்கு  கொடுக்கப்பட்டது தொடர்ந்து 200 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் 
மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தடை அரசின் மறு உத்தரவு 
வரும்வரை அமலில் இருக்கும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான 
சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும் கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு 
பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது. 

 *அரசாணை மீறி 
செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை* 

 கொரோனா  வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசால் 
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி 
நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மீதான தடைகள் அரசின்
மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்உள்ள அனைத்து வகைபள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும்
கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக 
அறிவிக்கப்படுகிறது. 

 இவ்வானையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.