Monday, May 04, 2020

On Monday, May 04, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
அரசு பள்ளியில் பயில்வோரின் குடும்பத்தினருக்கு உதவிய ஆசியர்கள்.
அனைவரும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய ஆசிரியர்கள்.

கொரோனா அச்சத்தால் நாடே முடங்கிக் கிடக்க ஊரடங்கால் மக்களும் வீடுகளுக்குள் தான் கடந்த 40 நாட்களாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலை மே 17 ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் பள்ளி – கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சமுத்திரம் உயர்நிலைப்பள்ளி என்பது மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்துள்ளது. அந்த பள்ளியில் சுமார் 244 மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும் கூட அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தான். இந்நிலையில் கொரோனா முடக்கத்தால் நம் பள்ளி மாணவ, மாணவிகளின் குடும்பத்தின் நிலை என்ன ஆனதோ என்று ஏங்கிய அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் உதவிட முடிவு செய்தனர்.
அதன்படி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 200 மாணவ, மாணவிகளின் குடும்பத்தினரை கண்டறிந்து அவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்தனர். அந்த டோக்கனில் எந்த நேரத்தில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விபரம் அடங்கி இருந்தது. அதன்படி 1 முதல் 50 வரை என மொத்தம் 4 பிரிவுகளாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பொருட்கள் வாங்க வந்த மாணவ, மாணவிகள் பெற்றோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் வட்டமிடப்பட்டிருந்தது. அந்த வரிசையில் பெற்றோர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். ஒரு குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி ஒரு பையிலும், மற்றொரு பையில் மளிகை பொருட்கள், காய்கனிகள், பிஸ்கட் உள்ளிட்டவை என மொத்தம் 2 பைகளின் பொருட்கள் தனித் தனியாக வழங்கப்பட்டது.
பள்ளியில் உள்ள 10 ஆசிரியர்கள் தலா 8 ஆயிரம் வீதம் 80 ஆயிரமும் சில நன்கொடையாளர்கள் மூலம் என மொத்தம் ஒரு லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.

Sunday, May 03, 2020

On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம்



இந்தியா முழுவதும் உள்ள MAHARATNA நிறுவனமான BHEL நிறுவனத்தில் சுமார் 38000 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். CORONA பெருந்தோற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசும் BHEL நிறுவனமும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக சம்பள வெட்டு மற்றும் பஞ்சபடி உயர்வை இம்மாதம் முதல் 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க ஆணை வெளியிட்டள்ளது.

இந்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் என்று BHEL CITU தொழிற்சங்கம் உரிமை மீட்பு போராட்டத்திற்கு அறைக்கூவல்  விடுத்தது. இதை தொடர்ந்து பெரும்பகுதி BHEL தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து  எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் 
சப் கலெக்டர் நேரில் விசாரணை. 


திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியில் உள்ள ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலையும் மணல் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவரும், வருவாய் ஆய்வாளர் ஒருவரும் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வாகனங்களையும் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே இதுபோன்று மணல் கடத்திச் செல்லலாமா என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த ஶ்ரீரங்கம் சப் கலெக்டர் சிபி ஆதித்தயா செந்தில்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து வளநாடு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். 
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் எதற்காக மணல் ஏற்றினார்கள்? எவ்வளவு மணல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சப் கலெக்டர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 
கொரோனா நேரத்தில் ஒட்டு மொத்த அதிகாரிகளும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வரும் இந்த சூழலில் வருவாய்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக
144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு .என்னை மிளகாய்த்தூள் மஞ்சள் தூள. மல்லித்தூள் 
புலி .பூண்டு .கோதுமை மாவு . உப்பு . காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் திரு.க.விஜயகுமார் மாநிலசெயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் மாவட்ட .ஒன்றிய . நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு
துறையூர் வட்டாட்சியர் திருமதி
எஸ் .அகிலா அவர்கள் துறையூர் சௌபாக்கியா மண்டபத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் துறையூர் கௌரவத் தலைவர் மதுரை வீரன் துறையூர் நகர கௌரவத் தலைவர் மகேஸ்வரன் ஒன்றிய சட்ட ஆலோசகர் சுதாகர் ஒன்றியத் தலைவர் தில்லைநாயகம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினார்கள்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே 
எந்தவித உதவியுமின்றி பரிதவிக்கும் நாடக கலைஞர்கள். 


வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி அரசுக்கு கோரிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெறும். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைளின் தொடர்ச்சியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இதனால் எந்த பகுதிகளிலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் நடைபெறவில்லை. 
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் இதுவரை எந்தவித உதவியும் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
சுமார் 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடந்த ஒன்றரை மாதமாக வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் சாப்பிட்டிற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பட்டிச்சாவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே அரசு கோவில்பட்டி சங்கத்தில் உள்ள நாடக கலைஞர்களுக்கு உதவிட வேண்டும் என்று நாடக – நடிகர்கள் வேடமணிந்து ஆட்டம் போட்டு பாட்டுப் பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
கொரோன வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில்  தமிழகம் முழுவதும் நிவரணங்களை திமுக கட்சியினர் செய்து வருகின்றனர், 


அதன்படி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் திமுக கட்சியின்  தலைவர் ஸ்டாலின் அவர்களின் ஆணைகிணங்க சமயபுரம் பகுதியில் வசிக்கும் நலிவுற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது, 5 கிலோ அரிசி ,எண்ணெய் உள்ளிட்ட ஒன்பது விதமாக மளிகை பொருட்கள் , பத்து விதமான காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களை வழங்கினர், சுமார் 500 பேருக்கு வழங்கபட உள்ளது, இன்று  50 நபர்களுக்கு  வழங்கப்பட்டது. நிவரணப்பொருட்களை மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர், இளங்கோவன், ஆகியோர் வழங்கினர், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துறை, ராஜசேகரன், சார்லஸ், அருவுடைநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பாடும் அபாயம் !

சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் வழிபாடு தடை செய்யப்பட்டு உள்ளது நிலையில் ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதே போன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜை நேரத்தில் கோவிலின் முக்கிய இராஜகோபுர கதவு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரசு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியூரிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சமயபுரத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து கோவிலின் மண்டபத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தியும் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து  தினசரி 50 முதல் 100 நபர்கள் வரை மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மொட்டை அடிக்கும் மண்டபம் மூடியுள்ள நிலையில் முடிகாணிக்கை எங்கே செல்கிறது? வெளியூரிலிருந்து சர்வ சாதாரணமாக சமயபுரம் வந்து செல்லும் நிலையில் நோய்த்தொற்று சமயபுரம் பாகுதியில் பரவ வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர்.  கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்  எதிர்பார்ப்பாக உள்ளது.
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
*பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் ஜி-கார்னர் மார்க்கெட் முடக்கப்படும்*


மொத்த வியாபாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி பொன்மலை ஜி-கார்னரில் இன்றிரவு முதல், மொத்த வியாபாரிகள் அனைவரும் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.  இதனை மீறும் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காய்கறி மொத்த விற்பனை சந்தையின் இயக்கமும் முடக்கப்படும்.


On Sunday, May 03, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் இருந்து
போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் கொரோனா தடுப்பு களத்திற்கு பணியாற்ற புறப்பட்டுச் சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் காவலர் தேர்வில் தேர்ச்சி  பெற்று பணிக்கான தயார் நிலையில் இருந்தவர்களுக்கு கொரோனா நடவடிக்கையால் பணிகள் வழங்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது கொரோனா ஊரடங்கு பணிக்கு  காவலர்கள் தேவை இருப்பதால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்கள் மட்டும் மணப்பாறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பெட்டி படுக்கைகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.