Thursday, June 11, 2020

On Thursday, June 11, 2020 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் 

பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந்துள்ளதை கான்கரிட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டு 
வரும் பணியை பொதுபணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி 
இன்று(11.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



 திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் சுமார் 
19500 ஏக்கர் பாசனம் அளிக்கக்கூடியது இந்த வாயக்காலின் தலைப்பு மதகு 1934ஆம் ஆண்டு 
கட்டப்பட்டது.
 இந்த தலைப்பு மதகில் அடைப்பு பலகைகள் உள்ள பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார 
பகுதிகள் செல்லும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க 
கைப்புறச்சுவர் திடிரென சாய்ந்து விட்டது. இச்சுவர் செங்கல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டவை 
மேலும் 80 ஆண்டுகளைக் கடந்து உள்ளதாலும் பழுதடைந்துவிட்டது.
 இச்சுவர் விழுந்ததினால் பெருவளை வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் 
எவ்வித இடையறும் இல்லை. இருப்பினும் போக்குவரத்திற்கு  சிரமம்இல்லாமல் இரவு பகலாக 
இப்பழுதடைந்த பகுதியினை கான்கிரிட் கலவை கொண்டு செப்பணிடப்பட்டு வருகின்றது. இன்னும் 15 
நாட்களுக்குள் பணிகளை முழுமையாக முடிக்கப்படும் என பொதுபணித்துறை திருச்சி மண்டல 
தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 ஆய்வின் போது பொதுபணித்துறை நடுகாவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம்  பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக்கோட்ட 
செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர்கள் ஜெயராமன் புகழேந்திரன் மற்றும் 
பலர் உடனிருந்தனர் .
On Thursday, June 11, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் கொரோனா தொற்று ..! பாதுகாப்பை பலப்படுத்தாத அதிகாரிகள்..!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  இந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 1875 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. திருச்சியில் நேற்று வரை 132 பேர் கொரோனாவிற்கு பாதித்து இருந்தனர். இதில் 105 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். ஒரே ஒரு மூதாட்டி மட்டும் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.


 இதை அடுத்து 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

சமயபுரம் பகுதியில் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதாக 2 பேர் தனிமை படுத்துவதற்காக திருச்சி  அரசு தலைமை மருத்துவ மனைக்கு  ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர், தற்பொழுது அவர்கள் இருந்த இடம் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் எந்த வித பாதுகாப்பும் ஏற்படுத்தாமல் மேலும் அப்பகுதியில் கொரோனா  பரவும் அச்சம் நிலவி வருகிறது, 

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விசுவநாதன் அவர்களிடம் செய்தியாளர்கள்  பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்ட பொழுது சரியாக பதில் அளிக்கவில்லை பிறகு நாங்க பாக்காத பிரஸ் அஹ என கூறி மழுப்பி சென்றுவிட்டார்.

Wednesday, June 10, 2020

On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 10


இந்து முன்னணி  சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். 
                    

இந்தியவில் கொரோனா  பாதிப்பு அடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி மூடப்பட்டது. 
5ம்முறையாக ஊரடங்கு உத்தரவிட்டதை தொடர்ந்து 
ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு 
தளர்வுகளும்  வழங்கப்பட்டது 
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அனைத்து
மத வழிபாட்டுத் தலங்களை திறக்கப்பட வேண்டும் என தொடர்ந்து போரட்டம் நடித்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி  கோவில் முன்பு  இந்து
முன்னணி
பேச்சாளர் மணிகண்டன் தலைமையில் 
ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது  தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜூன் 10

28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு 
ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது - அமைச்சர், மருத்துவமனை டீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

திருச்சி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கின்றனர். 


இதன் ஒரு பகுதியாக இன்று காலை 
2அல்ட்ரா சவுண்ட்,  கலர்டாப்ளர் மற்றும் ஏழு டிஜிட்டல் வரைபட கருவி உட்பட சுமார் 
28லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி, தொட்டியம், ஓமந்தூர் , தொட்டியம் துவரங்குறிச்சி  மண்ணச்சநல்லூர் மணப்பாறை தாலுக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டைமன்சிட்டி ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம்,  சோழா  ரோட்டரி சங்கம் மற்றும் இலங்கை யாழ்பானம் ரோட்டரி சங்கத்தினர்   இணைந்து தமிழக சுற்றுலா துறை, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் வனிதா ,  திருச்சி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் டாக்டர் லட்சுமி  ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜமீர்பாஷா, விஸ்வநாத், கோவிந்தராஜ், 
அமலச்சந்திரன் மற்றும் இலங்கை யாழ்பாணம் ரோட்டரி சங்க நிர்வாகி
ஜெயக்குமாரன்
அருமைநாகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,  தமிழக அரசு பல்வேறு வழிகளில்  சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கையாண்டு வருகிறது. 

ஜூன் 8ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் தமிழக அரசு கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே கோவில்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என தெரியவருகிறது. 


 சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர் , மக்கள் கூட்டம் கூடுவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி வருகின்ற து, சமயபுரம் தேர் நிற்கும் இடத்தை சுற்றி தரை கடை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், தரை கடை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக கடைகள் அமைத்து உள்ளனர்.  

 கட்டனமில்ல காலனி பாதுகாப்பு அறைக்கு செல்ல இயலாதவாறு சிறுது இடம் கூட இல்லாமல்  முழுவதும் கடைகள் அடைத்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.  

 அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, இதனால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கோவில் திறப்பதற்கு முன்பே இப்படி இருக்கும் வேளையில் கோவில் திறந்தாள் பாதிப்பு  அதிகமாகும் அச்சம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது,  


  பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகமும் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in    
*E.E.குமரேசன் மீது லஞ்ச ஒழிப்பு* **விசாரணைக்கு* *உத்தரவு* *


திருச்சி மாநகராட்சி,  அரியமங்கலம் கோட்டம்,  அரியமங்கலம் பொறியியல் பிரிவில் டீசல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் கடித எண். *LJD / TN /* *117 / 2020, நாள் :* *16.03.2020* தேதியிட்ட கடிதத்தின் மூலம் அனைத்து அலுவலர்களுக்கும் புகார் மனு அனுப்பியதோடு, சட்டசபை முன்பு சங்கு ஊதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தோம். 
 அதனையொட்டி  திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் 14.03.2020 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  சுமூக முடிவு எதுவும் எட்டப்படாததால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் முன்பு 16.03.2020 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் கலந்து கொண்ட உதவி ஆணையர் அவர்கள் *டீசல்* *கொள்முதலில் 58,662 ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பீடு* ஏற்படுத்தியாக தெரிவித்துள்ளார்.  இதனடிப்படையில் *லஞ்சம்ஊழல்* *தடுப்புமற்றும்* *கண்காணிப்புத்துறையின்* *இயக்குநர்* அவர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.  புகாரின் அடிப்படையில்  *petn* . *No.3272/* *2020 / LB / TR,* *Dated: 23.05.2020* கடிதத்தின் மூலம் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு  உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்சம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குனர் அவர்கள் பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரையின் மூலம் திருச்சி **மாநகராட்சியின்நிர்வாக* *பொறியாளர்* *குமரேசன்* அரியமங்கலம் கோட்டத்தின் உதவி செயற்பொறியாளராக இருந்த போது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான *விசாரணை* *வளையத்திற்குள்* *சிக்குவார்* அதன் மூலம் டீசல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் வெளிச்சத்திற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

*ஆ.வையாபுரி,*
*மாநில பொதுச்செயலாளர்,*
**லோக்தந்திரிக்* *ஜனதாதளம்* . * எனத் தெரிவித்துள்ளார்
*Cell :95002 - 99882.*

Tuesday, June 09, 2020

On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

மத்திய அரசு ரூ. 7500ம், மாநில அரசு ரூ. 5000ம் கரோனா நிவாரண நிதியாக
அனைவருக்கும் வழங்கவேண்டும்,
விவசாயத்தொழிலாளர்களுக்கு 200 நாள் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.


விவசாயிகள்,நெசவாளர்களுக்கான 
இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது,
தொழிற்சங்க உரிமைகளை பறிக்ககூடாது,
பொதுத்துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது.
ரேஷன் கடைகளில் அனைவருக்கும்
முறைகேடு இல்லாமல் பொருட்கள் வழங்கவேண்டும்.
காவிரி ஆனணயத்தை ஜல்சக்தி அமைப்போடு இனணக்கக்கூடாது.
அனைவருக்கும் இலவசமாக கரோனா
பரிசோதனை நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
On Tuesday, June 09, 2020 by Tamilnewstv in    
திருச்சி நாடாளுமன்றத்  உறுப்பினர் திரு நாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார். அதன் பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கொரோனா வைரஸ் உண்மையாக பாதித்தவர்களுக்கு இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை. 

 உண்மையாக பாதித்தவர்களுக்கு எல்லாம் பரிசோதனை செய்து இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடம் இருந்திருக்காது. அதனால் தான் தற்போது தனியார் மருத்துவமனைகள் வசமுள்ள 25 சதவீத படுக்கைகளை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. 

 ஆனால் இது போதுமானது கிடையாது. 50 சதவீத படுக்களை கையகப்படுத்த வேண்டும். அதேபோல் அனைவரிடமும் தமிழக முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 15 நாட்கள் வரை ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும். இதனால் கொரோனா மேலும் தீவிரமடையும். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் கரோனா சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். மக்களுக்கு உடனடியாக ரொக்கம் தேவைப்படுகிறது. அதனால் மாநில அரசு 7,500 ரூபாய், மத்திய அரசு 5,000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும். வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதாக இல்லை. 

 அரசு உத்தரவை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களும் மூன்று மாதமாக மூடிக் கிடப்பதால் அவர்களால் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். ஆகையால் நலிந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும். சலுகைகளை அறிவிக்க வேண்டும். கடன் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  கரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை. குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும். அரசின் உத்தரவை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.

Monday, June 08, 2020

On Monday, June 08, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜீன் 08

மருத்துவக் கல்வியில் ஓபிசி மாணவர் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

 எழுச்சி தமிழர் திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம்   முழுவதும்  கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருச்சி
மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் 
தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட பொருளாளர் சந்தனமொழி,  செய்தி தொடர்பாளர் சிவதண்டபாணி, .அன்பரசு, காந்தி ஆகியோர்
முன்னிலையிலும்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில நிர்வாகிகள்   சுஜாஅருள்,  அரசு,ஆகியோர்
கண்டன உரை  ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கல்வியில்  ஓபிசி மாணவர்களுக்கு   இட ஒதுக்கீடும், தனியார் துறையில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் இட
ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில்  நிர்வாகிகள் வழக்கறிஞர் திவாகரன், ஆல்பர்ட்ராஜ், சிறுத்தை சதீஷ், தில்லை குணா,  
தில்லை முரசு, கலியமூர்த்தி, துரை வளவன் பெரியசாமி, முருகேசன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.