Friday, July 25, 2014

On Friday, July 25, 2014 by Unknown in , ,    








படக்குறிப்பு: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி

செய்தி

திருப்பூர், ஜூலை 24-
சுதந்திர பாலஸ்தீனத்தின் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து காட்டுமிராண்டித்தனமாக கொலைவெறித் தாண்டவம் ஆடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்து திருப்பூர் அருகே மங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நாட்டின் தாக்குதலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பழனிசாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் இ.அங்குலட்சுமி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments: