Monday, July 28, 2014
திருப்பூர், ஜூலை. 28-
திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சியான 100 நாட்கள் நடக்கும் மக்கள் முகாமின் முதல் முகாம் கூட்டம் திருப்பூர் நல்லூர் அருகில் உள்ள கே.என்.பி.சுப்பிரமணிய நகரில் நடந்தது.மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,திருப்பூர் துணை மேயர் குணசேகரன், எம்.எல்.ஏ., கருப்பசாமி சிறப்புரையாற்றினர்.
தமிழக முதல்வர் அம்மா அவர்களை மூன்றாண்டுக்கு முன் அரியணையில் அமர்த்தினீர்கள்.இன்றைக்கு அம்மா அவர்கள் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்கள்.39 தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. தன்னந்தனியாக தமிழக மக்களை நம்பி, தனியாக வேட்பாளர்களை நிறுத்தி, மக்களிடம் திட்டங்களை விளக்கி அம்மா அவர்கள் ஒட்டு கேட்டார். 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி அளித்துள்ளீர்கள்.
கடந்த ஆட்சியில் மக்களுக்காக எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அனால் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்தவர் அம்மா; தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக முதல் குரல் கொடுப்பவர் அம்மா. காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை நிலை நாட்டியவர் அம்மா அவர்கள். பாலாறு பிரச்சினையிலும் அம்மா அவர்கள் தான் குரல் கொடுத்து உள்ளார்; அதலும் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். 1.80 கோடி ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி; முதியோருக்கு 1000 ரூபாய், பெண்களுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்க கூடியவர் அம்மா மட்டுமே.
கடந்த காலத்திலேயே தி.மு.க தலைவர் கொடுத்த டி.வியால் எந்த பிரயோஜனமுமில்லை.
ஆனால் அம்மா அவர்கள் வழங்கும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பவை.
இன்றைக்கு ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம்; நிதியுதவி வழங்கும் முதல்வர் அம்மா அவர்கள்.
சூரிய மின் சக்தியோடு பசுமை வீடுகளை வழங்குபவர் அம்மா ; கிராம பகுதி பெண்கள் பயன்பெற விலையில்லா ஆடுகள் வழங்குகிறார் . 4 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம் என அம்மா அள்ளித்தந்த திட்டங்களுக்கு தந்த அங்கீகாரம் தான் 37 தொகுதிகளில் நீங்கள் தந்த வெற்றி.
வெற்றியை பெற்றதற்கு பின்னால் பாரத பிரதமரை நேரில் சந்தித்து தமிழக திட்டங்களை செயல்படுத்த கேட்டுள்ளார்; அதை நிறைவேற்றியும் தருவார்.
இதே கருணாநிதி ஜெயித்திருந்தால் குடும்பத்துக்கு மந்திரி பதவி தான் கேட்பார். ஆனால் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்கான திட்டங்களை கேட்டு இருக்கிறார்.
மூன்றாண்டு காலமாக திட்டங்களை வழங்கி சாதனை படைத்த அம்மா அவர்கள் இன்னும் பல திட்டங்களை வழங்குவார்;என்றைக்கும் அம்மா அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த தி.மு.க ஆட்சியில் திருப்பூர் பனியன் தொழில் முடக்கப்பட்டது. அம்மா அவர்கள் தொழிலுக்கு தீர்வு ஏற்படுத்தினார்;வட்டியில்ல கடனாக 200 கோடி ரூபாய் வாரி கொடுத்தார். கடந்த காலத்திலேயே பெயரளவுக்கு இருந்த மாவட்டம், மாநகராட்சியை இன்று முழுமையான செயல்பாட்டில் கொண்டு வந்து நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து இருப்பவர் அம்மா.
தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்தவர் அம்மா. காவிரி பிரச்சினைக்காக வழக்கு தொடுத்து வெற்றி கண்டவர் அம்மா.இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் பேசினார்.
இந்த கூட்ட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, பி.கே.எம்.முத்து, கருணாகரன், அட்லஸ் லோகநாதன், பி.கே.எம்.முத்து, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், கலைமகள் கோபால்சாமி, ரத்தினகுமார், பி.லோகநாதன், ஷாஜகான், சுபா மோகன், அய்யாசாமி, வி.கே.பி.மணி, புலவர் சக்திவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
0 comments:
Post a Comment