Monday, July 28, 2014
அரசாணையைப் புறக்கணித்து திருப்பூர் மக்களை வஞ்சிக்கும்
அரசுப் போக்குவரத்துக் கழகம்: கட்டணத்தை குறைக்க சிபிஎம் கோரிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழகம்: கட்டணத்தை குறைக்க சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், ஜூலை 28 -
தமிழகத்தில் இயக்கப்படும் நகர, புறநகரப் பேருந்துகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசு வெளியிட்ட அரசாணையையே, திருப்பூர் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீறி, மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இந்த கட்டண உயர்வை ரத்து செய்து, அரசாணைப்படி உரிய கட்டணத்தை நிர்ணயித்து மக்களுக்கு ஏற்றப்பட்ட சுமையைக் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளியன்று தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் இயக்கப்படும் 127 நகர, புறநகரப் பேருந்துகளில் 120 எல்.எஸ்.எஸ்., 6 எக்ஸ்பிரஸ் சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன. ஒரேயொரு பேருந்துதான் சாதாரணக் கட்டணப் பேருந்தாக இயக்கப்படுகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் ஜூலை 23ம் தேதி எழுப்பிய கேள்விக்கும் அரசு சரியாக பதிலளிக்கவில்லை.
இத்துடன் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் அரசாணைக்கு புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நவும்பர் 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சாதாரணப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.3 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்.எஸ்.எஸ். பேருந்துகளில் அதைவிட ஒரு நிலைக்கு 50 பைசா மட்டுமே கூடுதலாக வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் சாதாரண கட்டணத்தைப் போல் ஒன்றரை மடங்கு வசூலிக்க வேண்டும் என உள்ளது.
ஆனால் திருப்பூர் மண்டலத்தில் இந்த உத்தரவுகள் அனைத்தும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. எல்லா பேருந்துகளையும் எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ் சொல்லி குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 என்று நிர்ணயித்துள்ளனர். அத்துடன் குறைந்தபட்சம் 2 கிலோமீட்டருக்கு ஒரு நிலை (ஸ்டேஜ்) என கணக்கிட்டு கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன்படி உதாரணத்திற்கு திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசிக்கு செல்லும் வழித்தடத்தில் மொத்தம் அதிகபட்சம் 8 நிலைகள் தான் இருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் கூடுதலாக ஒரு நிலையை நிர்ணயித்து உள்ளனர். இதன் மூலமும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சராசரியாக 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த வழித்தடத்தில் 10 கிலோமீட்டருக்குக் குறைவாக உள்ள அம்மாபாளயம், கோபால்ட் மில் நிறுத்தங்களுக்குக் கூட தலா ரூ.7 வசூலிக்கப்படுகிறது.
இதுபோல் திருப்பூரின் அனைத்து பிரதான வழித்தடங்களிலும் நிலைகளை (ஸ்டேஜ்) அதிகரித்தும், எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ், பிபி என சொல்லியும் கிட்டத்தட்ட அனைத்து பேருந்துகளிலும் அரசாணைக்குப் புறம்பாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசுப் பேருந்துகள் இப்படிச் செய்வதால் தனியார் பேருந்துகளும் இதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். திருப்பூர் மண்டலத்தில் மாதம் ஒன்றுக்கு தோராயமாக 1 கோடிப் பேர் நகர,புறநகரப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். அரசாணைக்குப் புறம்பாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தன்னிச்சையாக நிர்ணயித்திருக்கும் இந்த கூடுதல் கட்டண உயர்வினால் மட்டும் கடந்த 32 மாதங்களில் சற்றேறக்குறைய 50 கோடி ரூபாய் திருப்பூர் மக்களிடம் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்த மோசடியான கட்டண உயர்வை கைவிடவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். திருப்பூரின் சாமானிய ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிக அளவு பேருந்துகளை சாதாரண கட்டணப் பேருந்துகளாக அறிவிப்பதுடன், நியாயமான கட்டணம் நிர்ணயித்திடவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
0 comments:
Post a Comment