Monday, July 28, 2014

On Monday, July 28, 2014 by Unknown in , ,    




திருப்பூர்,ஜூலை.25-
திருப்பூர் மாநகர குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மேயர் விசாலாட்சி அதிகாரிகளுடன் மேட்டுப்பாளையம் சென்று முதல் மற்றும் 2-வது குடிநீர் திட்டங்களை ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மேட்டுப்பாளையம் குடிநீரை  பொது மக்களுக்கு சீராக விநியோகம் செய்யும் பொருட்டு திருப்பூர் மாநகராட்சி மேயர், அ.விசாலாட்சி மேட்டுப்பாளையத்திலிருந்து செயல்பட்டு வரும் முதலாவது மற்றும் 2-வது குடிநீர் திட்டத்தில் உள்ள முக்கிய குழாய்கள், தலைமை நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய¦தார். இந்த ஆய்வின் போது துணை மேயர் சு.குணசேகரன்,மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன்,ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி பொறியாளர் ரவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் சென்றிருந்தனர்.  
திருப்பூர் மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு மூன்று திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் முதலாவது குடிநீர் திட்டம், 2-வது குடிநீர் திட்டம் இரண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றிலிருந்து பம்பிங் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் சுவைமிக்கதாக இருப்பதால் மாநகர பொது மக்கள் மிகவும்  குடிநீர் பயன்பாட்டை விரும்புகின்றனர்.  
முதலாவது குடிநீர் திட்டத்திலிருந்து தினசரி 4.7 மில¦லியன் லிட்டர் தண்ணீர் மாநகராட்சி மூலம் பராமரிப்பு செய்து இயக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது குடிநீர் திட்டம் மாநகராட்சி மற்றும் வழியோர கிராகளுக்கு இணைத்து செயல்படுத்தப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் செயல¦படுத்த உத்தேசிக்கப்பட்டபோது மாநகருக்கு தினசரி 46.1 மில்லியன் லிட்டர் பம்பிங் செய்து வழியோர கிராமங்களுக்கு 15.987 மில்லியன் லிட்டரும் திருப்பூர் மாநகராட்சிக்கு 30.113 மில்லியன் லிட்டரும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.ஆனால் தற்போது மாநகராட்சிக்கு தினசரி சராசாரியாக 20.00 மில்லியன் லிட்டருக்கு குறைவான தண்ணீரே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்  மாநகராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் குடிநீர் சரி வர விநியோகம் செய்ய இயலவில்லை.   
பொது மக்களிடம் இருந்து இரண்டாவது குடிநீர் திட்டத்தினை குறிப்பிட்ட கால இடைவெளியில் விநியோகம் செய்ய கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் சீரான குடிநீர் விநியோகம் வழங்க கோரப்பட்ட பொழுது வழியோர கிராமங்¦களில் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட கூடுதல் அளவு குடிநீரை எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை நேரில் கண்டறிந்து குறைகளை களைய மாநகராட்சி மேயர் அ விசாலாட்சி நேரில் ஆய்வு செய்தார்.  
குக்கிலியாம்பாளையம் மற்றும் வழியோர கிராமங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட கூடுதலாக குடிநீர் எடுப்பது கண்டறியப்பட்டது.மேலும் தலைமை நீரோற்று நிலையத்தில் இறைக்கப்படும் சுத்திகரிப்பு செய்யப்படும் நீர் நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட குறைவான அளவே பம்பிங் செய்யப்படுவது தெரிய வந்தது. மேயர் விசாலாட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளரிடம் திருப்பூர் மாநகராட்சிக்கு தினசரி 26.00 எம்.எல்.டி அளவிற்கு குடிநீர் வழங்¦கவும், வழியோர கிராமங்களுக்கும் தடையின்றி உரிய குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யவும் அளவில் தேவையான குடிநீரை பம்பிங் செய்து வழங்குமாறும் பம்பிங் மெயினில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அதில்  அமைந்துள்ள ஏர்வால்வுகளை மாற்றியமைக்கவும், பம்பிங் மெயினில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்யவும் அறிவுரை வழங்கினார்கள். 
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் மற்றும் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் ஓரிரு தினங்களுக்குள் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடிக்கடி ஆய்வு செய்து கண்காணிக்கும் பொருட்டும்  மாநகருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு மேட்டுப்பாளையம் குடிநீரை பெற்று மாநகர பகுதியில் மக்களுக்கு இரண்டாவது குடிநீர் திட்டத்தினை வழங்கும் பொருட்டு மாநகராட்சி உதவிப் பொறியாளர்களுக்கு தனிப்பணியாக பங்கீடு செய்து உத்தரவிட்டார்.

0 comments: