Saturday, July 26, 2014

On Saturday, July 26, 2014 by Unknown in , ,    





திருப்பூர்  ஜூலை 26:      காவல்துறை  கலந்தாய்வு  கூட்டத்தின்  போது  மாண்புமிகு    தமிழக       முதல்வர்  அவர்கள்  அறிவித்ததற்கு  இணங்க,   மாவட்டத்தில்  பணிபுரியும்  காவல்  அதிகாரிகள்   முதல்  ஆளினர்கள்  வரை  40  வயது  மேற்பட்டவர்களுக்கு  முழு உடல்  பரிசோதனை  செய்யும்    பொருட்டு , 328   அதிகாரிகள்    மற்றும்   காவல்  ஆளினர்கள்  இனம்  கண்டறிந்து   அவர்களுக்கு    திருப்பூர்    பல்லடம்    தாராபுரம்  உடுமலை    ஆகிய  பகுதிகளிலுள்ள  அரசு  மருத்துவமனையில்  மருத்துவ   பரிசோதனை  நடைபெற்றுவருகிறது .  இப்பரிசோதனையின்   போது  பொது  உடல்  பரிசோதனை  பார்வை  மற்றும்      கேட்டல்,   காசநோய்,   இரத்த   பரிசோதனை   கல்லீரல்  நுரையீரல்   மற்றும்   சிறுநீரக  பரிசோதனை  வயிறு     மற்றும்    மார்பு  ஆகியவை   கண்டறியப்பட்டு  தக்க  சிகிச்சை  கொடுக்கப்பட்டு  வருகிறது .     பல்லடம்   அரசு   மருத்துவமனைக்கு   வருகை    தந்த   மாவட்ட  கண்காணிப்பாளர்      திரு . அமித்குமார்சிங்  .இ கா .ப    அவர்கள்    பரிசோதனை   குறித்து  கலந்தோசிதார் .   இதுவரை  118     காவலர்கள்    இந்த      பரிசோதனை   மூலம்  பயனடைந்துள்ளனர் .    இம்மாத   நிறைவுக்குள்      மீதமுள்ள  காவல்துறையினருக்கு   பரிசோதனை  மேற்கொள்ளப்படும்    என   தெரிவித்தார் .

0 comments: