Sunday, July 20, 2014

On Sunday, July 20, 2014 by Anonymous in , , ,    
சதுரங்க போட்டியில் ஈரோடு பள்ளி மாணவன் சாதனை

ஒசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. இந்த போட்டியில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட மாயவரம் எஸ்.எஸ்.வி. பள்ளியில் 3–வது வகுப்பு படிக்கும் மாணவன் எஸ்.ரோஷன், 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று மாநில அளவில் 3–ம் இடத்தை பிடித்தார்.
மேலும் தேசிய அளவிலான நடைபெற இருக்கும் சதுரங்க போட்டியில் தமிழக சதுரங்க அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவன் ரோஷனை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் பாராட்டினார். மேலும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கனகராஜ், ஈரோடு மாவட்ட சதுரங்க கவுன்சில் டாக்டர் எஸ்.ரமேஷ் மற்றும் மிராக்கல் செஸ் அகாடமி பயிற்சியாளர் தினேஷ்பாபு , இப்ராகிம் ஆகியோர் மாணவனை பாராட்டினார்கள்.

0 comments: