Sunday, July 20, 2014

On Sunday, July 20, 2014 by Anonymous in , , ,    
ஈரோட்டில் 900 மாணவ–மாணவிகள் பங்கேற்ற குங்பூ–கராத்தே போட்டி

மாநில அளவிலான குங்பூ–கராத்தே போட்டி இன்று காலை ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடந்தது. ஜீ குங்பூ ஊசு பெட ரேசன் சார்பில் நடந்த இந்த போட்டி தொடக்க விழாவில் தொழில் அதிபர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அப்துல் அஜிஸ், கந்தவேல் ஆகியோர் வரவேற்றனர்.

மாநில துணை தலைவர் ரவிச்சந்திரன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு துணை தலைவர் சுலைமான் பாட்சா, முன்னாள் கவுன்சிலர் சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டா, சியாஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு பரிசு மற் றும் சான்றிதழ்கள் வழங்குகிறார். 

0 comments: