Thursday, July 24, 2014

On Thursday, July 24, 2014 by Anonymous in , , ,    
 

ஈரோடு, : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், தூக்கநாயக்கன்பாளையம், நம்பியூர், சத்தி, தாளவாடி ஆகிய ஒன்றியங்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம், மூலனூர் ஆகிய ஒன்றியங்களிலும் கஸ்தூரிபாகாந்தி பாலிகா வித்யாலயா பள்ளி (கேஜிபிவி) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மாநில அரசு வழியாக செயல்படுத்தி வருகிறது. பெண் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள் கண்டறியப்பட்டு அங்கு பள்ளி செல்லா குழந்தைகளும், இடைநின்ற மாணவிகளும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. 
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த கேஜிபிவி பள்ளியில் 549 பேர் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்த கேஜிபிவி பள்ளிகளில் பள்ளி செல்லா குழந்தைகளையும், இடை நின்ற குழந்தைகளையும் கண்டறிய முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளதாவது: பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் முகாம் வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அந்தியூர் ஒன்றியத்தில் தாமரைக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓசூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.என்.பாளையம் மற்றும் சத்தி ஒன்றியத்தில் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பசுவனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கரளயம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாளவாடி ஒன்றியத்தில் தாளவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குன்னன்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கேர்மாளம் அரசு உயர்நிலைப்பள்ளி, தலமலை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாணவிகள் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அய்யண்ணன் தெரிவித்தார்.

0 comments: