Thursday, August 21, 2014

On Thursday, August 21, 2014 by Unknown in ,    





வரும் 22- ஆம் தேதி திருப்பூர் மாநகர வார்டு திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாநகரத்திற்கு உள்பட்ட வார்டுகளில் திமுக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கட்சியின் 14- ஆவது அமைப்புத் தேர்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையாளராக வழக்குரைஞர் இ.பரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில், வாக்களிக்கும் திமுகவினர், கடந்த 2012-ஆம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் உரிமைச்சீட்டு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

0 comments: