Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மதுரை அருகே கோஷ்டி மோதலில் 3 பேருக்கு வெட்டு
மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை மேலக்குயில்குடி பகுதியை சேர்ந்தவர் முட்டைகோஸ் (வயது 60), இவரது மகன் ராஜா. மருமகன் திருப்பதி (34) இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி இன்று எதிர்தரப்பினர் முட்டைகோசிடம் சென்று கூறினர்.
இதன் காரணமாக மீண்டும் இரண்டு கோஷ்டிளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முட்டைகோஸ், ராஜா, திருப்பதி ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த மோதல் தொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.