Tuesday, August 12, 2014
அலங்காநல்லூர் பகுதிக்கு தீயணைப்பு நிலையம் ஒதுக்கீடு செய்த முதல்–அமைச்சருக்கு கருப்பையா எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தீயணைப்பு நிலையம் அமைத்திட உத்தரவு வழங்கிய முதலமைச்சருக்கு சட்ட சபையில் கருப்பையா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்து பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:–
சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு 36 கோடி ரூபாயும், அலங்காநல்லூர் சார்பு பதிவாளர் அலுவலகம் கட்ட ரூ.50 லட்சமும், விவசாயிகள் நீண்டநாள் கோரிக்கையான சிதிலமடைந்த வைகை பெரியாறு கிளை கால் வாய்களை புணரமைப்பு செய்வதற்காக ரூ.26 கோடியும், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நீண்ட நாள் பணிபுரிந்த 61 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ததற்கு தனது நன்றியை சோழவந்தான் தொகுதி மக்கள் சார்பாக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவிப்பதாக பேசினார்.
தொடர்ந்து சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள 2 ஏக். 40 செண்ட். அரசு புறம்போக்கு நிலத்தில் அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி ஒன்றியங்கள் இணைகின்ற இடத்தில் கூடுதல் துணைமின் நிலையம் அமைத்திட வேண்டி கோரிக்கை விடுத்து பேசினார்.
அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது சட்டபேரவை உறுப்பினர் வேண்டுகோளுக்கிணங்க மின்தேவையைக் கருத்தில் கொண்டு வருங்காலத்தில் அதிகரிக்கும் மின்தேவையை கவனத்தில் கொண்டு அரசின் நிதிநிலைக்கேற்ப துணைமின் நிலையங்களை சீரமைத்திடவோ, புதியதாக மின்நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோல் அலங்கா நல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள 27 ஏக். அரசு புறம்போக்கு மேய்ச்சல் தரிசு நிலம் உள்ளது. இதில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி அமைத்திட வலியுறுத்தி சட்டசபையில் கருப்பையா எம்.எல்.ஏ. பேசினார். கடந்த 3 ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டிற்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக பேசினார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். உடுமலை, காந்தி சவுக் பகுதியைச்...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...