Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
சட்டப்படிப்பு முடித்த குற்றப்பின்னணி உள்ளவர்கள் வக்கீலாக பதிவு செய்ய தடை
மதுரையை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன் ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
வெளிமாநில சட்டக் கல்லூரிகளில் படித்த பலர் குற்றப்பின்னணி உள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு– பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 699 பேர் வக்கீலாக பதிவு செய்ய விண்ணிப்பித்துள்ளனர்.
குற்றப்பின்னணி உள்ளவர்களை வக்கீலாக பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு 699 பேரையும் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இது குறித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் விளக்கமளிக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருபாபரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 41 பேர் மட்டுமே குற்றப் பின்னணி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை தவிர்த்து 658 பேரை வக்கீலாக பதிவு செய்ய தடையில்லை என்று நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்.
மேலும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எத்தனை பேர் வக்கீலாக பதிவு செய்துள்ளனர் என்ற விபரங்களை தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டார்