Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by Unknown in ,    

திருப்பூர்  ஆக 19:


தாராபுரம், : தாராபுரத்தில் இரும்பு குடோனில் பொருட்களை திருடிய 6 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments: