Thursday, August 28, 2014
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாநகர மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் எம்.ஜி.ஆர்.மன்றம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் முழுமையான வெற்றியை பெற்றிடும் வகையில் அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கிடும் வகையில் 66 வாரங்கல் நடக்கும் தெருமுனை பிரச்சாரத்தில் முதல் வார நிகழ்ச்சியாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோல்டன் நகரில் பொதுகூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் பாரத் டையிங் பி.முருகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி வரவேற்றார்.மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கவுன்சிலர் எஸ்.முருகசாமி, அட்லஸ் சி.லோகநாதன், உஷாரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி வெ.அய்யாசா
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், 3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தீட்டி அந்த திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடையும் வகையில் மகத்தான ஆட்சி நடத்தும் ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான்.7 1/2 கோடி மக்களும் பயன் பெறுகின்ற வகையில் அவரது திட்டங்கள் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சி,முதியோர் பாதுகாப்பு திட்டம்.இபப்டி எண்ணற்ற திட்டங்களை நாள்தோறும் வழங்கி வருகிறார்.உலகத்தில் இதுவரை யாரும் சிந்தித்திடாத, செயல்படுத்தாத மக்கள் நலன் காக்கும் அற்புத திட்டங்களை அள்ளி, அள்ளி கொடுத்து தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக வழி நடத்தி செல்கிறார். திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை கட்ட உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 23 வது வார்டுக்கு ரூ.4 கோடிக்கும் மேல் நிதி ஒதிக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது, இது போன்ற திட்டங்கள் வரும் காலங்களில் தொடர முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
அகில உலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-
திருப்பூருக்கு பல்வேறு பெருமைகள் உண்டு.அதில் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரையே மாய்த்துக்கொண்ட திருப்பூர் குமரன் வாழ்ந்த ஊர். தி.மு.க.ஆட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மீது பொய் வழக்கு போட்டதால் திருப்பூர் நீதின்மன்றதில் அவர் ஆஜரானார்.1982 ம் ஆண்டு ஜெயலலிதா கலந்து கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம் திருப்பூரில் நடந்தது. மக்களால் உருவாகப்பட்ட இயக்கம் அண்ணா தி.மு.க.வை எம்.ஜி.ஆர்.தொடங்கினார்.இன்று அந்த தண்ணீகரற்ற தலைவி ஜெயலலிதா சிறுபான்மை மக்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஆட்சி நடத்துகிறார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.இமாலய வெற்றி பெற்றுள்ளது.உலக சரித்திரத்தில் இயக்கம் மட்டும்தான் இடம் பிடித்துள்ளது.இவ்வாறு தமிழ்மகன் உசேன் பேசினார்.
தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான ராமராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்திய அரசியலில் வீராங்கனையாக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.15வது நாடாளுமன்ற பொது தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அண்ணா தி.மு.க.இயக்கம் பெற்றுள்ளது.முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு மக்கள் அளித்த மனிமகுடம்தன் இந்த வெற்றி.வருகின்ற 2016 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் 100 சதவீத வெற்றியும் அண்ணா தி.மு,க பெற தொண்டர்களும் இயக்கதினரும் முழுமையாக பாடுபட வேண்டும்.இவ்வாறு ராமராஜன் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்,தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன் ஆகியோர் பேசினார். மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜெயஸ்ரீ கே.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...

0 comments:
Post a Comment