Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by Unknown in ,    




கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுபோல, திருப்பூர் மாநகர வளர்ச்சிக்காக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ,  (டீமா) சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.

பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்து வர்த்தக ஒப்பந்தங்களைத் தரும் வெளிநாட்டினர், இந்நகரை பார்த்து முகம் சுழிக்கும் அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைந்த நகரமாக உள்ளது. பாலங்கள், சாலைகள் உள்ளிட்டவை தேவையான அளவிலும் திருப்தி அளிக்கும் வகையிலும் இல்லாமல் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது திருப்பூர் மாநகரம். இந்நிலையை மாற்றியமைத்து, உலகத்தரம் வாய்ந்த கட்டுமான வசதிகள் கொண்ட, சிறந்த நகரமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் (முதல்வர்) மனது வைத்தால் தான் முடியும்.
கோவை மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ. 2,378 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை வழங்கியிருப்பது போன்று திருப்பூர் மாநகராட்சிக்கும் உரிய நிதி வழங்கி, இம்மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகரை ஃபேஷன்வோó நகரமாக மாற்றி, வெளிநாட்டினரை ஈர்க்கும் வண்ணம் செய்துதர வேண்டும். திருப்பூர் பின்னலாடைத் தொழிலுக்கு தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் கொடுத்து வரும் நீங்கள் இக்கோரிக்கையையும் ஏற்று, திருப்பூர் மாநகருக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்துதர வேண்டும் என்றார்.

0 comments: