Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by Unknown in ,    




பொள்ளாச்சி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி போலீசார் தூங்கும்போது தப்பி ஓடிவிட்டார்.கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். கார் செல்வபுரம் முத்துசாமி காலனி எஸ்.ஏ. கார்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு குடோனுக்குள் சென்றது.போலீசார் அந்த குடோனுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்தவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உக்கடத்தைச் சேர்ந்த அபிப் ரகுமான் (39) என்றும், இவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சிக்கி 4 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு, அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், அதிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால், 4 டன் ரேஷன் அரிசி, லாரி, ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

0 comments: