Thursday, August 28, 2014
திருப்பூர் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் விரைவில் அனைத்து வார்டுகளுக்கும் பாகுபாடு இல்லாமல் பிரித்து வழங்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மேயர் அ.விசாலாட்சி உறுதி அளித்தார்.
திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் (நேற்று மாலை 4 மணிக்கு) மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் மா.அசோகன், துணைமேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, சி.பி.வசந்தாமணி, வி.பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல் உள்ளிட்டவர்களும், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரவி, உதவி போரியாலரகுள், உதவி ஆணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சாக்கடை கால்வாய், தெருவிளக்குகள், குடிநீர், கட்டிட பராமரிப்பு தார் சாலை அமைப்பது உள்பட 116 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு உறுப்பினர்கள் அதன்மீது விவாதங்கள் நடத்தினர்.அதன் விபரம் வருமாறு:-
மாரப்பன்:- தெருவிளக்கு இல்லாத அனைத்து பகுதிகளுக்கும், விளக்குகள் அமைக்க வேண்டும். டெண்டர் விட்ட பணிகள் அனைத்தும் துவங்கப்பட வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
ரவிச்சந்திரன்:-திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடைப்பாலம் அமைக்கும் பணி துவங்கப்படாமல் உள்ளது. மேலும் நிழற்குடை அமைக்கும் பணியை தாமதம் இல்லாமல் தொடங்க வேண்டும்.ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது.குறிப்பாக குமார் நகரில் இருந்து சிறு பூலுவப்பட்டி ரிங் ரோடு வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.என்.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் தொடர வேண்டும்..
முருகசாமி:- 3வது குடிநீர் திட்டத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் தரத்தை ஆய்வு செய்து, விநியோகிக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக 2வது மண்டலத்தில் ஆட்கள் போட வேண்டும்.
சுப்பிரமணி:- துப்புரவுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், எனது வார்டில் அதிக அளவில் குப்பை பிரச்னை உள்ளது. 30 பேர் இருக்க வேண்டிய நிலையில் 16 பேர் மட்டுமே உள்ளனர். இதேபோல் குப்பை பெட்டிகள் பற்றாக்குறையாக உள்ளது.
காந்திமணி:- எனது வார்டில் குடிநீர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. செவந்தாம்பாளையம் ஏ.டி.காலனியில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும். பாரதி நகரில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது.அவற்றை சரி செய்ய வேண்டுகிறேன்.
ஜெ.ஆர்.ஜான், 2வது மண்டல தலைவர்:- குப்பை அகற்றும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. தற்போது அவர்கள் பணியில் சுணக்கம் ஏற்பட்டு, குப்பைகள் பல இடங்களில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை மட்டும் சரியாக பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களை அழைத்து காரணம் குறித்து கேட்டறிய வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் தீர்மானங்களின் மீது பேசினர்.
முடிவில் மேயர் அ.விசாலாட்சி கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அற்புத திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டம் மாநகராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததினால் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சியை காட்டிலும் திருப்பூர் மாநகராட்சி சிறப்புடன் செயல்படுத்தி உள்ளது.இதற்கு அனைவற்க்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மன்றத் தில் பேசிய மைனர் உறுப்பினர்கள் மக்களின் தேவைகளை குறித்து பேசினார்கள்.3வது வார்டில் 95 சதவீத பணிகள் நடந்துள்ளது. 5 சதவீத வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் விரைவில் செய்து தரப்படும். விரைவில், 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்க-ப்படும். உறுப்பினர் காந்திமதி (தே.மு.தி.க.)பேசும்போது கொடுக்கிற கடிதம் எல்லாம் காணமல் போய்விடுகிறது என கூறினார்.ஆதிகாரியிடம் கொடுத்து விட்டு வீட்டில் தேடினார் கடிதம் கிடைக்காது.12வது வார்டு கவுன்சிலர் பேசும் பொது 26 நம்பர் டேங்க் மர்மமாக உள்ளது என தெரிவித்த கருத்து முற்றிலும் தவறான கருத்து. அவர் வார்டுக்கு உட்பட்ட 1வது மண்டலத் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளை அழைத்து சென்று அனைத்து பகுதிகளிலும் பாகுபாடு இல்லாமல் தண்ணீர் விடுவது குறித்து பேசியுள்ளனர். இதுகுறித்து மண்டல தலைவர் என்ற முறையில் அவரிடம் விபரம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். நடை மேம்பாலம் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையகர அலுவலகத்திலிருந்து அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். நிழற்குடை பணி ஆங்காங்கே தற்போது நடந்து வருகிறது. குமார் நகரிலிருந்து சிறுபூலுவப்பட்டி வரை ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பி.என்.ரோடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்பதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கலாம். ஆக்கிரப்பு பாதியில் நின்றது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்லாம். குப்பை பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை அழைத்து, குறைபாடுகளை கூறி சரி செய்யப்படும். 4வது மண்டல அலுவலகம் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் 2வது மண்டல அலுவலகம் கட்ட அனுமதி கிடைக்கும். 521 முதல் 524 வரை உள்ள தீர்மானங்கள் மட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். உடுமலை, காந்தி சவுக் பகுதியைச்...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்க...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
0 comments:
Post a Comment