Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    

சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியினை கலெக்டர் சண்முகம் குத்துவிளக்கேற்றி வைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த கல்லூரி சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்நத 37 மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் கோராப்பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், அழகு ஆபரணங்கள், சணல் மற்றும் காட்டன் பைகள், மென் பொம்மைகள், மெழுவர்த்தி, நாப்கின், சுடிதார், நைட்டி வகைகள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. 
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 22 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், பிற மாவட்டங்களில் இருந்து 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி விற்பனையை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களை வாங்கினார்கள். 
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, கல்லூரி முதல்வர் ஜெயசங்கர், இயக்குநர் சிவக்குமார், உதவி தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: