Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி வாய்க்கால்ரோடு காளியண்ணன் வீதியைச் சேர்ந்தவர் பேபி. இவர் நேற்று பெண்களுடன் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பெருந்துறை பாண்டியன் வீதியைச் சேர்ந்த ஒருநபர் தான் வக்கீலாக வேலை செய்து வருவதாக கூறினார். அவரது வீட்டில் கடந்த 7 மாதங்களாக வேலை செய்து வந்தேன். அப்போது அவர் எனது அண்ணன் சி.எம். அலுவலகத்தில் பி.ஏ.வாக வேலை செய்கிறார். அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறினார். அப்போது எனது மகன் 10வது படித்து விட்டு வீட்டில் இருந்ததால் சத்துணவு பணியாளர் வேலைக்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். பின்னர் சுயஉதவிக்குழு மூலமாக பணம் வாங்கி தருவதாக மேலும் 70 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் பணம் வாங்கிய பிறகு எந்த வேலையும் செய்து கொடுக்கவில்லை.
 இந்நிலையில் கடந்த 22ம்தேதி வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார். அவரது போனிற்கு தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இவரை பற்றி விசாரித்தபோது அந்த நபர் போலி வக்கீல் என தெரிய வந்தது. என்னை போலவே 5 பேரிடம் வேலைவாங்கி தருவதாக 9 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: