Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    

 




திருப்பூர், :திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர், திருப்பூர், கருவம்பாளையம் பகுதியில் தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறார். 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகநாதன் மற்றும் அவரது நண்பர் கவியரசு ஆகிய இருவரும் சினிமா பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது டிக்கட் எடுப்பதற்காக கவியரசு உள்ள சென்ற போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் லோகநாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு ஓடியுள்ளார். 
லோகநாதன் உடனே சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சென்ட்ரல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
விசாரணையில், அந்த வாலிபர் மதுரை புதூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பாண்டியன் (29) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீசார் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments: