Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
தினசரி மக்களின் அன்றாட  வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூடநம்பிக்கை பரவுவதற்கும் பஞ்சமில்லை.
நம் நாட்டில் கடவுள் அவதாரம்! நடமாடும் தெய்வம்! லோக குரு! தொடங்கி, பீடி, சுருட்டு, பிராந்தி சாமியார்.  அதற்கும் மேலாக நிர்வாண பூஜை, பாலியல் பூஜை வரைக்கும் சென்ற சாமியாரின் கதைகள் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் நாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அரிய மங்கலம் சுடுகாட்டில்  யாரோ ஒருவர் மர்மமான முறையில் தங்கி வருவதாக வும், அவர் கடந்த சில நாள்களாக நிர்வாண பூஜை செய்து வருவதாகவும், இதைக் காண பக்தியின் மோகத்தில் பக்தகே()டிகள் சிலர் சென்று வருவதாக வும் கூறப்பட்டது.
அத்தகவலின் அடிப்படையில் நாம் விசாரித்தபோது,  சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மணி கண்டன் என்பவர்தான் இந்த வேலை களில் ஈடுபட்டு வருதாகவும், அவர்தான் ஒரு அகோரி என்றும், இதுவரையில் காசியில் இருந்ததாகவும், அங்கு நரமாமி சம் சாப்பிட்டு வந்ததாகவும் கூறி, அங்கு வரும் பக்தர்களிடம் அச்சத்தை ஏற் படுத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது.  இவர் காசியிலிருந்து இங்கு வந்த தற்கு காரணம் தனது சொந்த ஊரில் ஆன்மீகப் பணியை செய்யவேண்டு மாம்;  அதற்காக அரியமங் கலத்தில் அகோரி காளி கோவில் கட்டி வழிபாடு நடத்த வேண்டுமென்றும், இதற்காக திருச்சி அருகேயுள்ள ஆலம்பட்டி புதூரில் அகோர காளி மாந்திரிக அறக்கட்டளையை  நடத்தி வருவதாக வும், இதில் 150-க்கும் மேற்பட்ட மாந்திரிகங்களை சொல்லிக் கொடுத்து வருவதாகவும் கூறிவரும் இவர் பில்லி, சூனியம் பொய் என்று பிரச்சாரம் செய்ப வர்கள் 48 நாள்களில் இறந்து விடுவார் கள். அதற்கான யாகமும் நடத்தி வருவ தாகவும் புளுகு மூட்டை அவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப் பினர் நாடு முழுவதும் வரதட்சிணை, பேய், பில்லி சூனியத்திற்கு எதிரான பிரச் சாரங்களை மேற்கொண்டு வருவதோடு, இவை அனைத்தும் பொய் என்று சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். இதைக் கண்ட மணிகண்டன், தவ்ஹீத் ஜமாத் தலைவரிடம் சென்று, இப்படி ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளீர்கள். பேய், பில்லி சூனியம் எல்லாம் இருக்கின்றன. இவைகளை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என சவால் விட்டுள்ளார். பதிலுக்கு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின ரும், நிரூபித்து காட்டு என்று சவால் விட்டதால் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தமே போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவிடம் சென்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு, தான் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபடும் போது தனக்கு இடையூறு ஏற்படுவதாகவும், எனவே எனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டு மென்று மனு கொடுத்துள்ளார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், காவல் ஆணையரும் மனுவை பெற்றுக் கொண்டு, பாதுகாப்பு எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது. வேண்டுமானால் உன்னுடைய ஆன்மீக பணியை சுடு காட்டிற்குள்ளேயே நடத்திக் கொள் என்று பொறுப்பு இல்லாமல் கூறியிருக் கிறார்.
இதனைத் தொடர்ந்து அகோரி மணிகண்டன்  இரவு நேரங்களில் சுடு காடு அருகே இருக்கும் கிராமத்திற்குள் நிர்வாணமாக சத்தமிடுவதும், ஓடுவது மாக இருப்பதால் அப்பகுதி பெண்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.   மூடத்தனத்தை மக்களிடத்தில் பரப்பு வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் மணிகண்டனின் இந்தச் செய லுக்கு  திராவிடர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு காலம் காசியில் பிழைப்பு நடத்தி விட்டு தற்போது திருச்சியில் தனது ஊரில் ஆன்மீக பணி செய்ய வந்துள்ளேன் என்று கூறி  அரியமங்கலம் சுடுகாட்டில் நிர்வாணமாக பூஜை, புனஸ்காரங்கள் செய்து வருவதோடு, அனைத்து மத ஜாதியினருக்குமான பொதுவான மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சுடுகாட்டில் மது, கஞ்சா வஸ்து போன்றவைகளை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல், நிர்வாண பூசை செய்து வருவது வெட்கக்கேடானது. இதை இதுவரை மாவட்ட நிருவாகமும், மாநகராட்சி நிருவாகமும், காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இந்த மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலியாண்ட புரத்திலுள்ள பிள்ளையார் கோவில் உண்டியலைத் திருடிவிட்டு தப்பியோ டிய வர்தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மூடநம்பிக்கையையும், மக்களிடத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் அகோரி  மணிகண்டன்மீது இதுவரை காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடருமா னால் திராவிடர் கழகமும், சமூக ஆர்வலர்களும், அகோரி மணிகண் டனை அங்கிருந்து துரத்தும் நடவடிக் கையில் ஈடுபடுவார்கள் என்பதே உண்மை.

0 comments: