Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in , ,



திருப்பூர்,ஆக.11
  பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள  ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று  தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்   திறந்து வைத்தார்.
  திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது. 
 இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.