Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in , ,



திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு., க.அம்மா பேரவை  சார்பில்,100 வாரங்கள் நடக்கும் மக்கள் முகாமின் 3-வது வார முகாம் அவினாசி அருகில் நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரைப்பாளையத்தில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றி தமிழக  அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்க்கினார். நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை  இணை செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம்,  பூண்டி விஸ்வநாதன்,ஆனந்தகுமார்,  பத்ம நந்தினி, ரவிக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.