Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in , ,


திருப்பூர், ஆக. 11-
திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள தந்தை பெரியார் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க உறுப்பினர்களுக்கு  விலையில்லா மின் தறிகள், மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், விலையில்லா தறி உபகரணங்களை வழங்கி பேசினார். அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நல்ல திட்டங்களை அம்மா தந்து கொண்டிருக்கிறார். அம்மா ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் திட்டமாக 1.80 கோடி ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி திட்டம் வழங்கினார். முதியோர் உதவி தொகை, திருமண உதவி, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீட்டு திட்டம் என அம்மா அவர்களின் சாதனை திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 
 இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாக வேண்டும் என்பதற்காக கல்விக்காக 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை வழங்கி வருகிறார்; கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறார்.
விவசாயிகளுக்கு எண்ணற்ற சலுகைகள் அறிவித்துள்ளார். நெசவாளர்கள் பயனுக்காக 10 ஆயிரம் வீடுகள் பசுமை வீடுகள் கட்ட உத்தரவிட்டார். இன்றைக்கு தமிழ்நாட்டில் அதிக பசுமை வீடுகள் 500க்கும் அதிகமாக வழங்கி திருப்பூர் தான் முதலிடம் வகிக்கிறது. 
 நெசவாளர் சங்கங்கள் ஒன்று கூடி புரட்சி தலைவி அம்மா அவர்களின் பசுமை நகர் என்ற பெயரில் மிகப்பெரிய நகரம் உருவாக்கி வருகிறது.  நெசவாளர்களுக்காக திட்டங்கள் எண்ணிலடங்காதவை. நெசவாளர்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு  உள்ளது.3200 மின் ராட்டைகள் நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. 250 ராட்டைகளை இங்கேயே வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 
பசுமை வீடுகள் கட்ட 15 ஆயிரம் மூட்டை சிமெண்டு அரசு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. 
அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி , சங்கங்கள் சிறப்பாக் செயல்பட செய்துள்ளார். 
தந்தை பெரியார் கூட்டுறவு சங்கத்தின் இந்த ஆண்டு உற்பத்தி 516 லட்சம், விற்பனை 636 லட்சம். மொத்த லாபம் 78 லட்சம் லாபமாக உள்ளது.
 போனசாக 10.03 லட்சம் ரூபாய் போனசாக கொடுக்கப்பட்டுள்ளது.
  போட்டோ டிசைன் மூலம் சிறப்பாக சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இச்சங்கத்தில் 60 பேர் ராட்டைகள் பெறுகிறார்கள். 
அம்மா ஆட்சிக்கலாத்தில் நெசவாளர் குடும்பங்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி நெசவாளர்களின் பாதுகாவலனாக அம்மா அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதற்காக விலையில்லா சேலை, வேட்டி உற்பத்தியை தமிழக நெசவாளர்களுக்கு தந்து உள்ளார்கள். என்றைக்கும் நெசவாளர்கள் அம்மா அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் திருப்பூர் மேயர் எ.விசாலாட்சி பேசியதாவது:
இந்தியா தான் உலகிலேயே நெசவு தொழிலில் தலை சிறந்து விளங்கிய நாடு.
தமிழக நெசவாளர்களின் துணிகள் மிகவும் தரமாணவை; உயர்ந்த தரம் உடையவை. ஆங்கிலேயர்கள் பருத்தியை எடுத்து சென்று இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்து நம்மை வீழ்த்தினார்கள். 
ஆங்கிலேயரை வீழ்த்த சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் கையில் எடுத்து போராடியது உப்பையும் ராட்டையையும்; இன்று அம்மா அவர்கள் மலிவு விலை உப்பை தருகிறார்கள். நாம் சிரமப்படாமல் இருக்க மின் ராட்டையும் வழங்கி வருகிறார்கள் எனவே அம்மா தான் வாழும் மகாத்மாவாக திகழ்கிறார். என்றார்.

இந்த விழாவில் கைத்தறி, துணி நூல் துறை இணை இயக்குனர் சென்னியப்பன், பல்லடம் எம்.எல்.ஏ பரமசிவம்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் விஜயகுமார், சபரி, கனகராஜ், கோகுல், கருணாகரன், கேபிள் பாலு, ராஜ்குமார், அன்பரசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படம்:திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள தந்தை பெரியார் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க உறுப்பினர்களுக்கு  விலையில்லா மின் தறிகள், மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், விலையில்லா தறி உபகரணங்களை வழங்கி பேசினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் விசாலாட்சி முன்னிலை வகித்தார்.இந்த விழாவில் கைத்தறி, துணி நூல் துறை இணை இயக்குனர் சென்னியப்பன், பல்லடம் எம்.எல்.ஏ பரமசிவம்,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் விஜயகுமார், சபரி, கனகராஜ், கோகுல், கருணாகரன், கேபிள் பாலு, ராஜ்குமார், அன்பரசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.