Monday, August 11, 2014
திருப்பூர் ஆக 11. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் , அவினாசிபாளையம் காவல்நிலைய சரகதிட்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் திருட்டு போவது சம்மந்தமாக திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் உத்தரவின் பேரில் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு தனிப்படை அமைக்கபட்டு குற்றவாளிகளை மாவட்ட காவல் துறையினர் தேடிவந்தனர் . இச்சூழலில் கடந்த 10-8-2014 அன்று அதிகாலை அவினாசிபாளையம் காவல் நிலையதிட்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக சந்தேகதிட்கிடமாக கால்நடைகளை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுனர் ஜீவானந்தம் மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான் ஆகியோரை விசாரணை செய்தபோது கால்நடை திருடர்கள் என தெரியவந்தது .மேலும் அவர்களிடமிருந்து ஒரு மாடு இரு கன்றுகுட்டிகள் . பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் பல்லடம் காவல் நிலைய சரகதிட்குட்பட்ட பகுதியில் விசைத்தறி சம்மந்தமாக நாட்டிங் , மிசின் திருடி விற்பனை செய்ய முயன்ற ராஜா த/பெ . கருப்பையா முகம்மது இர்பான் .த/பெ . தொமியா முத்து ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய் . 2.00.000/ . மதிப்புள்ள நாட்டிங் மெசின் பறிமுதல் செய்யப்பட்டது . மேற்கண்ட இரு வழக்குகளின் எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
-
Sir / Madam, The Kargil Vijay Diwas was celebrated on 26.07.2014 at 9.00 a.m. at the Kargil War Memorial on the Beach Roa...