Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by farook press in ,

          திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்து செயின் பறிப்பு, இருசக்கர வாகனங்களை கொள்ளையடிப்பதும், வழிப்பறி செய்யும் போது பொதுமக்களை தாக்கி காயப்படுத்தியும், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.எஸ்.என்.சேஷசாய் இ.கா.ப அவர்கள் ஆணையிட்டுள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட எதிரிகளின் விபரம் 
பெயர் மற்றும் முகவரி
குற்ற செயல்கள் விபரம்
1. எம்.தியாகு வயது 24
  த/பெ முருகன் @ முருகேசன்,
  சுந்தரராஜபுரம், 
  சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
  உத்தமபாளையம் தாலுக்கா,
  தேனி மாவட்டம்
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
2. ஆர்.செல்வம் @ அன்புசெல்வம்  
  @ செல்வராஜ் வயது 29,
  த/பெ ராமர்@ கட்டராமர்,
  மந்தையம்மன் கோவில் தெரு, 
  சுக்கான்கல்பட்டி, கீழகூடலூர்,
  உத்தமபாளையம் தாலுக்கா, 
  தேனி மாவட்டம்
வழிப்பறி கொள்ளை வழக்குகள் – 4
இரு சக்கர வாகன திருட்டு வழக்கு -1
3. ஊமைத்துரை வயது 24
  த/பெ கோம்பையா
  ஆழ்வார்திருநகரி, மறவர் வீதி, 
  ஸ்ரீவைகுண்டம்,
  தூத்துக்குடி மாவட்டம்
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
4. பாண்டி @ இசக்கிமுத்து
  த/பெ இசக்கிமுத்து
  கதவு எண் 8/74, 
  அண்ணன்தம்பிகுறிச்சி, 
  புதுகாலனி, ஸ்ரீவைகுண்டம்,    
  தூத்துக்குடி மாவட்டம்
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
5. மணிகண்டன் வயது 25,
  த/பெ  வேலு
  தட்சன் மொழி வீதி, 
  சாத்தன்குளம்,
  தூத்துக்குடி மாவட்டம்
வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் – 2
                 மேற்படி ஐந்து பேருக்கும் ஓர் ஆண்டுகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். புதிதாக துவக்கப்பட்ட திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்தில் இதுவரை 9 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்.
                                                         

                                                             காவல் ஆணையர்,
                                                            திருப்பூர் மாநகரம்.