Sunday, August 31, 2014

On Sunday, August 31, 2014 by farook press in ,    
சென்னை: தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்கு கடைசி ஆளாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தமிழக பாஜக தலைவராக டாக்டர் தமிழிசை நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அதேபோல தமிழிசையின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தனும், எங்கிருந்தாலும் வாழ்க என்று சுருக்கமாக வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 comments: