Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown in ,    
போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாக போலீஸார் தொந்தரவு செய்தது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த பி.ராஜகுமாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது அப்பா பெயர் செல்லையா. எனது அம்மா பெயர் சி.சந்திரா. எனக்கு திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறேன். என் அப்பா நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர் என்னுடன் வசித்து வருகிறார்.
 எனது தாய் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி எனது அம்மா வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அதற்காக போலீஸôர் என்னை விசாரணை செய்கின்றனர் என்று என் அம்மா எனக்கு தகவல் தெரிவித்தார்.
 மேலும், விசாரணைக்காக என்னையும், இறந்த வீட்டு உரிமையாளரின் மருமகள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக என் அம்மா தொலைபேசியில் தெரிவித்தார். மேலும், போலீஸார் என்னை விசாரணைக்காக கோவைக்கு 12-ஆம் தேதி அழைத்துச் செல்வதாகவும் எனது அம்மா தெரிவித்தார்.
 ஆனால், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து அவரை சித்ரவதை செய்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
 இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலின் போது மனுதாரரின் தாய்க்கு உடல் ரீதியாக நடந்த தொந்தரவுகள் குறித்து கோவை மாவட்ட தலைமை நீதிபதி அல்லது அவரது மூலம் நியமிக்கப்பட்ட பொறுப்பான நீதிமன்ற அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
 மாநிலம் அல்லது மத்திய அரசின் மருத்துவமனை பெண் உதவியாளர் உதவியுடன் அவரை பரிசோதனை செய்து செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments: